TNPL 2023 : கடைசி போட்டியில் திருச்சிக்கு கருணை காட்டாமல் மிரட்டிய நெல்லை – பிளே ஆஃப் சுற்று அட்டவணை இதோ

TNPL 28
- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜூலை 5ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் ஏற்கனவே வெளியேறிய திருச்சியை அணியை நெல்லை எதிர்கொண்டது. திருநெல்வேலியில் இருக்கும் இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய திருச்சி அணிக்கு ராஜ்குமார் 2 (6) கங்கா ஸ்ரீதர் ராஜு 13 (8) சரண் 0 (4) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் 4வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக செயல்பட்ட ஜாஃபர் ஜமால் விரைவாக அரை சதமடித்து திருச்சியை கரை சேர்க்க போராடினார். நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் 6 பவுண்டரி 8 சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்து சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 (53) ரன்களில் ஏமாற்றத்துடன் அவுட்டானார்.

- Advertisement -

நெல்லையின் வெற்றிநடை:
ஆனால் எதிர்ப்புறம் ராஜ்குமார் 3 (9) ஆண்டணி தாஸ் 10 (5) என இதர முக்கிய பேட்ஸ்மேன்கள் கை கொடுக்காமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அப்போது 19 ஓவர்களில் திருச்சி 146/6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை வந்ததால் முதல் இன்னிங்ஸ் அத்தோடு முடிவதாக நடுவர்கள் அறிவித்தனர். நெல்லை சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக பொய்யாமொழி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரம் போட்டி மழையால் தாமதமாகி மீண்டும் துவங்கிய போது 16 ஓவரில் 130 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நெல்லைக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை துரத்திய நெல்லை அணிக்கு தொடக்க வீரர்கள் அருண் கார்த்திக் 3 பவுண்டரியுடன் 13 (8) ரன்களும் சூரியபிரகாஷ் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 22 (13) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். ஆனால் அவர்களை விட அடுத்ததாக வந்த அஜிதேஷ் குருசாமி இரு மடங்கு அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்து நெல்லையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

குறிப்பாக இந்த தொடரில் ஏற்கனவே சதமடித்து அசத்தியிருந்த அவர் இந்த கடைசி போட்டியிலும் தம்முடைய சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி அரை சதமடித்து 5 பவுண்டரி 4 சிக்சருடன் 56* (29) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் மறுபுறம் அசத்திய நித்திஷ் ராஜகோபால் 2 பவுண்டர் 35* (21) ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 11.5 ஓவரிலேயே 135/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை வென்றது. அதனால் 2 விக்கெட்டுகளை ஈஸ்வரன் எடுத்தும் திருச்சி வெற்றி காண முடியவில்லை.

இந்த வகையில் கடந்த ஜூன் 12 முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இத்தொடரின் 28 போட்டியில் கொண்ட லீக் சுற்று நிறைவு பெற்றுள்ளது. அதில் 7 போட்டிகளில் 5வது வெற்றியை பதிவு செய்த நெல்லை புள்ளி பட்டியலில் 3வது இடத்தை பிடித்தது. மறுபுறம் பங்கேற்ற 7 போட்டிகளிலும் ஆறுதலுக்கு ஒரு ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத திருச்சி மோசமாக தோற்று வெளியேறியது.

இதையும் படிங்க:மும்பை அரசியல் ஆரம்பம், முதல் தேர்விலேயே தரமான இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்காத அகர்கர் – ரசிகர்கள் கொந்தளிப்பு

இதை தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் ஜூலை 7ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு சேலத்தில் நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் மோதுகின்றன. அதே போல புள்ளி பட்டியலில் 3, 4 ஆகிய இடங்களை பிடித்த ஜூலை 8ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு சேலத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மோத உள்ளன.

Advertisement