ரொம்ப உருட்டாதீங்க.. அது ஒன்னும் இம்பாசிபிள் கிடையாது.. தெ.ஆ அணிக்கு ராகுல் டிராவிட் பதிலடி

Shukri Conrad
- Advertisement -

சென்சூரியன் நகரில் டிசம்பர் 26ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாளான பாக்ஸிங் டேவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் கிரிக்கெட் மோதும் முதல் டெஸ்ட் போட்டி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற உள்ள இத்தொடரில் சிறப்பாக விளையாடி இந்தியா முதல் முறையாக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

ஏனெனில் 1970களிலேயே இங்கிலாந்து, நியூஸிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் 2 முறை வென்று மாபெரும் சாதனை படைத்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு மட்டும் 1992 முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்தியா இதுவரை விளையாடிய 8 தொடர்களில் 7 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

அசாத்தியம் கிடையாது:
கடந்த 2010/11இல் மட்டும் எம்.எஸ். தோனி தலைமையில் 1 – 1 என்ற கணக்கில் இந்தியா போராடி தொடரை சமன் செய்தது. அதனால் இம்முறை அந்த மோசமான வரலாற்றை மாற்றி புதிய சரித்திரம் படைக்கும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது. ஆனால் சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கோன்ராட் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

மேலும் ரபாடா, லுங்கி நிகிடி ஆகிய 2 பவுலர்கள் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதால் தங்களுடைய பவுலிங் நெருப்பாக இருக்கும் என்றும் அவர் இந்தியாவை எச்சரித்திருந்தார். அதனால் இத்தொடர் கிரிக்கெட்டுக்கு பதிலாக குத்துச்சண்டை போல் இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தென்னாபிரிக்க மண்ணில் வெல்வது கடினம் என்றாலும் அதற்காக சாத்தியமே இல்லை என்று சொல்ல முடியாது என அவருக்கு இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறைமுக பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி முதல் போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “புள்ளி விவரங்களின்படி தென்னாப்பிரிக்கா வெல்வதற்கு மிகவும் கடினமான நாடாகும். ஆனால் நாங்களும் இங்கே சில நல்ல பேட்டிங் செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளோம். எனவே இங்கு சிறப்பாக விளையாடுவது அசாத்தியம் அல்லது மிகவும் கடினம் என்று சொல்ல முடியாது. உலகின் மற்ற நாடுகளை விட இங்கே பவுன்ஸ் சற்று வித்தியாசமாக இருக்கும்”

இதையும் படிங்க: இன்னும் 11 விக்கெட் எடுத்தா போதும்.. வரலாற்றை மாற்றியமைக்க காத்திருக்கும் – தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின்

“அதே சமயம் இங்கே இங்கிலாந்து போல அதிகமான ஸ்விங் இருக்காது ஆஸ்திரேலியா போல சில மைதானங்களில் வேகமும் இருக்காது. அதனால் கடந்த பல வருடங்களாக இங்கே இந்திய பேட்ஸ்மேன்கள் சவாலை சந்தித்து வருகின்றனர். ஆனாலும் இதற்கு முன் நாங்கள் இங்கே சில நல்ல இன்னிங்ஸ் விளையாடியுள்ளோம். எனவே நன்றாக விளையாடினால் வெற்றி காண்பதற்கான அனுபவம் எங்களிடம் உள்ளது” என்று கூறினார்.

Advertisement