இன்னும் 11 விக்கெட் எடுத்தா போதும்.. வரலாற்றை மாற்றியமைக்க காத்திருக்கும் – தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது டிசம்பர் 26-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செஞ்சூரியன் மைதானத்தில் டிசம்பர் 26-ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதுவரை தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இல்லை என்பதன் காரணமாக இந்த டெஸ்ட் தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் மைல்கல்லை நோக்கி பயணிக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இதுவரை இந்திய அணிக்காக 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 489 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் மேலும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். அதோடு மட்டுமின்றி 500 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தும் வாய்ப்பு அவருக்கு உள்ளது.

அதோடு உலக அளவில் 500 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற வரலாற்றை மாற்றியமைக்கும் வாய்ப்பும் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. தற்போது 37 வயதாகும் அஸ்வின் இனிவரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடினால் நிச்சயம் அவர் ஓய்வு பெறுவதற்குள் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அணில் கும்ப்ளேவின் சாதனையையும் முறியடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஆனால் தற்போதைக்கு ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இருக்கும் பிரச்சனை யாதெனில் : இந்திய அணி எப்போதெல்லாம் வெளிநாட்டில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறதோ அப்போதெல்லாம் அஸ்வினை உட்கார வைத்துவிட்டு ஜடேஜாவை முதன்மை சுழற்பந்து வீச்சாளராக சேர்த்து வருகின்றனர். ஏனெனில் வெளிநாடுகளில் விளையாடும் போது பேட்டிங் தெரிந்த சுழற்பந்து வீச்சாளர்களே தேவை என்கிற காரணத்தினால் ஜடேஜாவிற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்காவுல ஏன் தெரியுமா நம்மால ஜெயிக்க முடியல.. சஞ்சய் பாங்கர் கொடுத்த – சூப்பர் விளக்கம்

ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து சதங்களை பதிவு செய்துள்ள அஸ்வினை உட்கார வைத்து ஜடேஜா, ஷர்துல் தாகூர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து வருவது அவருக்கு செய்யும் அவமரியாதை என்றும் ரசிகர்கள் சிலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement