தென்னாப்பிரிக்காவுல ஏன் தெரியுமா நம்மால ஜெயிக்க முடியல.. சஞ்சய் பாங்கர் கொடுத்த – சூப்பர் விளக்கம்

Sanjay-Bangar
- Advertisement -

இந்திய அணியானது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளை கூட அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இதுவரை இந்திய அணியால் தென்னாப்பிரிக்கா மண்ணில் மட்டும் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் வெற்றிபெற முடியாமல் இருந்து வருகிறது. கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் இதுவரை இந்திய அணி எட்டு முறை தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

ஆனாலும் இந்த எட்டு சுற்று பயணத்திலுமே இந்திய அணி ஒரு முறை கூட அவர்களிடம் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே கிடையாது என்கிற மோசமான சாதனை நம்மிடம் உள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி மட்டுமே டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

- Advertisement -

அதனை தவிர்த்து வேறு எந்த இந்திய கேப்டனும் அங்கு டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இல்லை. தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை இந்திய அணி 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 12 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியும், 4 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளன.

அதை தவிர்த்து 7 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இப்படி தென்னாப்பிரிக்க மண்ணில் மட்டும் ஏன் இந்திய அணியால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை என்ற கேள்விக்கு சரியான பதிலளிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பாங்கர் ஒரு தெளிவான விளக்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் கூறியதாவது : இதுவரை தென் ஆப்பிரிக்காவிற்கு நாம் சுற்றுப்பயணம் செல்லும் போதெல்லாம் அங்கு இரண்டு அல்லது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டுமே தான் விளையாடி உள்ளோம். அதனால் தான் இந்திய அணியால் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை.

இதையும் படிங்க : தெ.ஆ தொடரில் விராட், ரோஹித் பெரிய ரன்ஸ் அடிப்பாங்க.. காரணம் இது தான்.. கவாஸ்கர் கணிப்பு

மாறாக 4 அல்லது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினால் நிச்சயம் நம்மால் அந்த நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம்மை தகவல் அமைத்து தொடர்ச்சியாக வெற்றி பெற முடியும். இந்த ஒரு காரணம்தான் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி தோல்வியை சந்திப்பதற்கான காரணம் என சஞ்சய் பாங்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement