
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57-வது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தாஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக ரஹானே 48 ரன்களையும், ஆண்ட்ரே ரசல் 38 ரன்களையும் குவித்தனர். சென்னை அணி சார்பாக நூர் அஹமது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக பிரேவிஸ் 52 ரன்களையும், ஷிவம் தூபே 45 ரன்களையும் குவித்தனர். கொல்கத்தா அணி சார்பாக வைபவ் அரோரா 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அகமது 4 ஓவர்கள் பந்துவீசி 31 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சே வெற்றிக்கு காரணம் என்பதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய நூர் அகமது கூறுகையில் :
இது உண்மையிலேயே மிகச் சிறப்பான வெற்றி. நாங்கள் ஒரு அணியாக மிகச் சிறப்பாக செயல்பட்டதற்கு கிடைத்த பரிசாகவே இந்த வெற்றியை கருதுகிறேன். இந்த போட்டியில் எனது பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. அதேபோன்று பிரேவிஸ் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார். நான் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக பர்ப்பிள் கேப் பெற்றது பற்றி எல்லாம் யோசிக்கவே இல்லை. ஏனெனில் நான் எனது அணி வெற்றிபெற வேண்டும் என்று மட்டுமே விரும்பி பந்துவீசி வருகிறேன்.
இதையும் படிங்க : ப்ரேவிஸ் 30 ரன்ஸ் அடிச்சதால் இல்லை.. அந்த 2 பேரால் சிஎஸ்கே’விடம் தோற்க இதான் காரணம்.. ரஹானே பேட்டி
சென்னை அணியின் வெற்றி தான் முக்கியம் என்று செயல்பட்டு வருவதால் எத்தனை விக்கெட்டுகள் விழுகிறது என்பதெல்லாம் நான் பார்க்கவில்லை. ஒட்டுமொத்தமாக அணி வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் எனக்கு இந்த பர்ப்பிள் கேப் பெரிய விடயம் கிடையாது. இந்த போட்டியில் அன்க்ரிஷ் ரகுவன்ஷி விக்கெட் கிடைத்த விதம் எனக்கு பிடித்திருந்தது. என்னுடைய லைன் மற்றும் லென்த்தை நான் சரியாக வைத்து பந்துவீசி வருவதாலே என்னால் வெற்றிகரமாக பந்துவீச முடிகிறது என நூர் அகமது கூறியது குறிப்பிடத்தக்கது.