வேகத்தால் ஒரு பயனும் இல்லை – உம்ரான் மாலிக்க்கை மட்டம் தட்டும் வகையில் பாக் இளம் வீரர் கருத்து

Umran Malik 3
- Advertisement -

கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கிய ஐபிஎல் 2022 தொடர் 65 நாட்களாக 74 போட்டிகளுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றுள்ளது. இந்தத் தொடரில் சென்னை, மும்பை உள்ளிட்ட வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் ஆரம்பத்திலேயே சந்தித்த தொடர் தோல்விகளால் லீக் சுற்றில் வெளியேறிய நிலையில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் வருடத்திலேயே லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அபாரமாக செயல்பட்டு பைனலில் ராஜஸ்தானை வீழ்த்தி சொந்த மண்ணில் கோப்பையை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

ஒவ்வொரு வருடத்தைப் போல இந்த வருடமும் ஐபிஎல் தொடரில் நிறைய இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஈர்த்தனர். அதில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 22 வயது இளம் வீரர் உம்ரான் மாலிக் தனது அசுர வேகப் பந்துகளால் எதிரணிகளைத் திணறடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றார். கடந்த 2021இல் முதல் முறையாக ஒருசில போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் அசால்டாக 140 கி.மீ வேகப்பந்துகளை வீசி அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி போன்றவர்களின் பாராட்டுகளை அள்ளியதால் 4 கோடிக்கு ஹைதராபாத் நிர்வாகம் தக்க வைத்தது.

மிரட்டல் உம்ரான்:
அதனால் இந்த வருடம் முழுமையாக வாய்ப்பு பெற்று 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை 20.18 என்ற சராசரியில் எடுத்த அவர் அந்த அணி நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் மிரட்டலாகவும் செயல்பட்டார். தனது அதிரடியான வேகத்தால் எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை தெறிக்கவிட்ட அவர் சர்வ சாதாரணமாக 150 கி.மீ வேகப் பந்துகளை வீசியதால் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர், ரவிசாஸ்திரி போன்ற ஜாம்பவான்கள் வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டனர்.

Umran

குறிப்பாக டெல்லிக்கு எதிரான போட்டியில் 157.0 கி.மீ பந்தை வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதி வேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக சாதனை படைத்தார். இருப்பினும் வேகத்திற்கு ஈடாக ரன்களையும் வாரி வழங்கியதால் விமர்சனங்களையும் சந்தித்த அவர் முடிந்த அளவு முன்னேற்றம் கண்டு வருகிறார். அந்த நிலைமையில் இந்தியாவில் அந்த அளவுக்கு வேகத்தில் பந்துவீசும் ஒருவர் இல்லை என்பதால் ஐபிஎல் முடிந்ததும் சொந்த மண்ணில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் முதல் முறையாக அவரை தேர்வு குழுவினர் யோசனையின்றி தேர்வு செய்துள்ளனர்.

- Advertisement -

வேகத்தில் பயனில்லை:
அப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இந்தியாவிற்கு விளையாடும் அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ள உம்ரான் மாலிக் இந்த ஐபிஎல் 2022 தொடரில் ஹைதராபாத் விளையாடிய 14 போட்டிகளிலும் அதி வேகமான பந்தை வீசி அதற்கான ஸ்பெஷல் விருதாக 14 லட்சங்களையும் அள்ளினார். சொல்லப்போனால் இந்த வருடத்தின் அதிவேகமான பந்தை வீசிய அவர் அதற்காக தனியாக 10 லட்சம் விருதை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் குஜராத்துக்காக விளையாடிய நியூசிலாந்தின் லாக் பெர்குசன் ஃபைனலில் 157.3 கி.மீ வேகத்தில் வீசி அந்த விருதை தட்டிச் சென்றார். ஆனாலும் கூட இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த கண்டுபிடிப்பாக உம்ரான் மாலிக் கருத்தப்படுகிறார்.

Umran Malik

இந்நிலையில் உம்ரான் மாலிக், லாக்கி பெர்குசன் போன்ற பவுலர்கள் மிரட்டலான வேகத்தில் வீசுவதில் எந்த பயனும் இல்லை என்று பாகிஸ்தான் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளர் சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக வேகப்பந்து வீச்சில் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் மிரட்டிய அவர் கடந்த 2021 வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டு அதற்காக ஐசிசி வழங்கும் சர் கேர்பீல்டு சோபர்ஸ் கோப்பையையும் வென்றார்.

- Advertisement -

மட்டம் தட்டிய ஷாஹீன்:
வரும் ஜூன் 8-ஆம் தேதி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “உங்களிடம் நல்ல லைன், லென்த் மற்றும் ஸ்விங் போன்ற திறமைகள் இல்லாமல் போனால் எவ்வளவு வேகம் இருந்தாலும் அது உங்களுக்கு உதவாது” என ஒற்றை வரியில் மட்டம் தட்டும் வகையில் பேசினார்.

இதையும் படிங்க : கேப்டன்ஷிப் எல்லாம் சரிதான் – ஆனால் 4 ஓவர் பவுலிங் என்னாச்சு? பாண்டியாவுக்கு முன்னாள் கேப்டன் கேள்வி

சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்வது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “தற்போது இங்கு நல்ல வெயில் அடிப்பது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சவாலானது என்றாலும் அதை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். உலக கோப்பைக்கு தகுதி பெற இந்த தொடர் முக்கியமானது என்பதால் தோல்வி அடைய விரும்பவில்லை” என்று பேசினார்.

Advertisement