மும்பை ஒர்த் இல்லாத பிளேயர வாங்கிட்டாங்க. தோக்குறதுல தப்பே இல்ல – முன்னாள் வீரரின் நியாயமான கருத்து

RCB vs MI Rohit Sharma
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 2-வது வாரத்தைக் கடந்தும் விறுவிறுப்பாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளிலும் அடுத்து அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தில் திண்டாடி வருகிறது. அந்த அணியை போலவே 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான அணியாகவும் நடப்புச் சாம்பியனாகவும் களமிறங்கிய சென்னையும் தனது முதல் 4 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த வேளையில் பெங்களூருக்கு எதிரான தனது 5வது போட்டியில் அதிரடியாக செயல்பட்டு முதல் வெற்றியை பதிவு செய்து 9-வது இடத்திற்கு முன்னேறியது.

Mumbai Indians MI

- Advertisement -

இப்படி கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை கூட தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றிப் பாதைக்கு திரும்பிய நிலையில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த மாஸ்டர் கேப்டனான ரோகித் தலைமையில் முதல் வெற்றியை பதிவு செய்ய முடியாமல் கடைசி இடத்தில் மும்பை தவிப்பதால் அந்த அணி ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

திரும்புமா மும்பை:
அந்த அணிக்கு பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் மட்டும் தனி ஒருவனாக இதுவரை பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றிக்காக போராடினார். இஷான் கிசான், லலித் யாதவ் போன்ற இளம் வீரர்கள் தொடர்ச்சியாக ரன்கள் அடிக்க தவறும் வேளையில் ரோகித் சர்மா, கைரன் பொல்லார்ட் போன்ற முக்கிய முதுகெலும்பு வீரர்களின் பேட்டில் இருந்து ரன்கள் வர மறுப்பது பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அதைவிட பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முருகன் அஷ்வின் ஆகியோரை தவிர இதர பவுலர்கள் ரன்களை வாரி வழங்குவது அந்த அணியின் தொடர் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

MI Mumbai Indians

இப்படி மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங்கை வைத்துக் கொண்டு தொடர் தோல்விகளில் இருந்து எப்படி அந்த அணி மீண்டெழ போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் கடந்த 2014-ஆம் ஆண்டு இதேபோல தனது முதல் 5 போட்டிகளில் தோல்வியடைந்த மும்பை அதன்பின் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பதிவு செய்து ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதுடன் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. எனவே அதேபோன்றதொரு மேஜிக்கை மீண்டும் மும்பை நிகழ்த்தும் என அந்த அணி ரசிகர்கள் எப்போதும் உறுதியாக நம்புகின்றனர்.

- Advertisement -

ஆச்சர்யம் இல்லை:
இந்நிலையில் வெற்றிகரமான அணி என பெயரெடுத்த மும்பை இப்படி தொடர்ச்சியாக சொதப்புவதில் எந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் இல்லை என ஆஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். தற்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “புள்ளி பட்டியலின் அடிப்பகுதியில் மும்பை இருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஏனெனில் ஏலத்தின் போது அவர்கள் அதிர்ச்சியான முடிவை எடுத்தனர். அவர்கள் இஷான் கிசான் மீது ஏராளமான பணத்தை கொட்டியுள்ளனர். அவர் நுணுக்கம் தெரிந்த திறமையான வீரர் என்றாலும் உங்களின் மொத்த பணத்தையும் அவர்மீது செலவழிக்கும் அளவுக்கு அவர் ஒர்த் கிடையாது. மேலும் கடந்த பல மாதங்களாக கிரிக்கெட்டே விளையாடாத ஜோப்ரா ஆர்ச்சரை அவர்கள் வாங்கினர். எனவே அவர்களது அணியில் ஒரு சில ஓட்டைகள் உள்ளது” என்று கூறினார்.

Watson

அவர் கூறுவது போல இஷான் கிசான் தரமான வீரர் என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும் 15.25 கோடி என்ற மிகப்பெரிய தொகையை அவர் ஒருவர் மீது மட்டும் செலவழித்த காரணத்தால் வேறு ஒருசில தரமான வீரர்களை மும்பையால் வாங்க முடியாமல் போனது. அதேபோல் இந்த வருடம் விளையாட மாட்டார் எனத் தெரிந்தும் இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சரை அந்த அணி வாங்கியது மிகப்பெரிய தவறு என்று ஷேன் வாட்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisement -

இது போன்ற தவறுகளை அந்த அணி செய்யாமல் இருக்கும் பட்சத்தில் கடந்த வருடம் வரை வெற்றியில் முக்கிய பங்காற்றிய ட்ரெண்ட் போல்ட், க்ருனால் பாண்டியா போன்ற பழைய வீரர்களையும் வேறு ஒருசில தரமான வீரர்களையும் வாங்கியிருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

CSK-1

சென்னையின் பிரச்சனை:
மும்பையை போலவே 4 கோப்பைகளை வென்று நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னையும் 9-வது இடத்தில் தடுமாறுவதற்கான காரணத்தையும் வாட்சன் விளக்கியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதுவரை நடந்த 5 போட்டிகளில் நான் பார்த்ததில் சென்னையின் வேகப்பந்து வீச்சில் மிகப்பெரிய ஓட்டை உள்ளது. காயத்தால் தீபக் சஹர் விலகியது அந்த அணியின் பந்துவீச்சில் மிகப்பெரிய ஓட்டையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : இப்படி ஒரு வைரத்தை இழந்துட்டீங்களே ! தோல்வி கிடைக்காமல் இருக்குமா – மும்பையை சாடும் ரசிகர்கள்

மேலும் கடந்த வருடம் வரை இருந்த ஷார்துல் தாகூரும் இல்லை. அதேபோல் கடந்த வருடம் இருந்த ஜோஸ் ஹேசல்வுட் போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களும் தற்போது இல்லாதது அந்த அணியன் தடுமாற்றத்திற்கு காரணமாக உள்ளது” என்று கூறினார்.

Advertisement