இப்படி ஒரு வைரத்தை இழந்துட்டீங்களே ! தோல்வி கிடைக்காமல் இருக்குமா – மும்பையை சாடும் ரசிகர்கள்

Hardik Pandya GT Vs RR 2.jpeg
- Advertisement -

மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற்ற 24-ஆவது லீக் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் மோதின. நவி மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் ராஜஸ்தானை தோற்கடித்த குஜராத் 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 192/4 ரன்கள் விளாசியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 52 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 87* ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவருடன் இளம் வீரர் அபினவ் மனோகர் 28 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 43 ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் பட்டையை கிளப்பிய டேவிட் மில்லர் 14 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 31* ரன்கள் எடுத்து அபார பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

டாப் டக்கர் குஜராத்:
அதை தொடர்ந்து 193 என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக ரன்களை குவிக்க மற்றொரு தொடக்க வீரர் தேவதூத் படிக்கல் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அந்த நிலையில் யாருமே எதிர்பாராத வண்ணம் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 8 (8) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் குஜராத்தை பிரித்து மேய்ந்த ஜோஸ் பட்லர் வெறும் 24 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் பவர்பிளே முடிவதற்குள் 54 ரன்களை பட்டாசாக விளாசி ஆட்டமிழந்தார்.

ஆனால் அப்போது சுதாரித்த குஜராத் அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 11 (11) ரன்களிலும் ராசி வேன் டர் டுசனை 6 (10) ரன்களிலும் அவுட் செய்து போட்டியை தனது பக்கம் திருப்பியது. இறுதியில் அதிரடி வீரர் சிம்ரோன் ஹெட்மையர் 29 (17) ரன்கள் எடுத்து போராடி அவுட்டாக அடுத்து வந்த ரியன் பராக் 18, நீசம் 17 போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 20 ஓவர்களில் 155/9 ரன்களை மட்டுமே எடுத்த ராஜஸ்தான் பரிதாபமாக தோற்றது. குஜராத் சார்பில் பந்துவீச்சில் அசத்திய லாக்கி பெர்குசன் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

வைரமாக ஜொலிக்கும் பாண்டியா:
இந்த அதிரடியான வெற்றிக்கு பேட்டிங்கில் 87* ரன்களும் பந்துவீச்சில் 1 விக்கெட்டும் பீல்டிங்கில் 1 ரன் அவுட்டும் செய்து ஒரு ஆல் இன் ஆல் மிரட்டல் ஆல்-ரவுண்டராக செயல்பட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் அவரது தலைமையிலான குஜராத் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்து 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த தொடருக்கு முன்பாக உள்ளூர் போட்டிகளில் கூட செய்த அனுபவம் இல்லாத அவர் தலைமையில் குஜராத் கண்டிப்பாக தடுமாறும் என எதிர்பார்த்த நிலையில் அசத்தலான கேப்டனாகவும் அபாரமான ஆல்-ரவுண்டராகவும் செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா தன்மீது வைக்கப்பட்ட கணிப்புகளை பொய்யாக்கியுள்ளார்.

குறிப்பாக சமீப காலங்களாக காயத்தால் பந்து வீசாமல் இருந்த அவர் தற்போது அதிலிருந்து முழுமையாக குணமடைந்து முதன்மை பந்து வீச்சாளரை போல சிறப்பாக பந்து வீசி வருகிறார். அத்துடன் பேட்டிங்கில் முன்பெல்லாம் கடைசி நேரத்தில் களமிறங்கி பினிஷராக செயல்பட்ட அவர் இப்போது 4-வது இடத்திலேயே 10 ஓவர்களுக்கு முன்பாகவே களமிறங்கி தனது அணியை சரிய விடாமல் அதிரடியாக ரன்களை குவித்து வெற்றிகளை தேடித் தேடிதந்து வருகிறார். இதனால் அதிக எடுத்த பேட்ஸ்மேங்களின் பட்டியலில் 227 ரன்களுடன் 2-வது இடத்தில் மின்னுகிறார். மேலும் கேப்டனாகவும் தேவையான நேரத்தில் தேவையான பந்து வீச்சாளரை உபயோகப்படுத்துவது, பீல்டிங்கை கச்சிதமாக செட் செய்து எதிரணி வீரர்களை அவுட்டாக்குவது போன்ற பல அம்சங்களில் மனிதர் பெரிய அளவில் முன்னேற்றத்தை எட்டிள்ளார்.

- Advertisement -

இழந்துட்டீங்களே:
இப்படி இந்த வருட ஐபிஎல் தொடரில் அவரும் அவரது அணியும் ஜொலிப்பதை பார்க்கும் ரசிகர்கள் இப்படி ஒரு வைரத்தை வைரத்தை இழந்து விட்டீர்களே என்று அவரின் முன்னாள் அணியான மும்பையை விளாசி வருகின்றனர். ஏனெனில் கடந்த காலங்களில் மும்பை அணியில் விளையாடி அதன் வாயிலாக இந்திய அணிக்கு விளையாடும் அளவுக்கு உயர்ந்த அவர் பேட்டிங்கில் பினிசெராகவும் நல்ல வேகப்பந்து வீச்சாளராகவும் ஆல்ரவுண்டராகவும் அந்த அணியின் பல சரித்திர வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

பொதுவாகவே ஆல்ரவுண்டர்கள் ஏதோ ஒரு வழியில் வெற்றியைத் தேடித் தருவார்கள் என்பதால் அவர்களுக்கு மவுசு அதிகம் என்பதை மறந்த மும்பை நிர்வாகம் சமீபத்தில் நடந்த ஏலத்தில் அவரை தக்க வைக்காமல் விட்டது. அதன் காரணமாக பும்ராவுக்கு கைகொடுக்கும் வகையில் ஒரு நல்ல வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் திணறும் அந்த அணி இதுவரை பங்கேற்று 5 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் 10-வது இடத்தில் திண்டாடுகிறது.

இதையும் படிங்க : இவரா இப்படி? நட்சத்திர தமிழக வீரர் மீது வன்மத்தை காட்டிய யுவராஜ் சிங் ! ரசிகர்கள் அதிருப்தி

ஆனால் பாண்டியாவின் குஜராத் அதே புள்ளி பட்டியலின் முதல் இடத்தில் ஜொலிக்கிறது. எனவே இப்படி ஒரு வைரத்தை இழந்தால் தோல்வி கிடைக்காமல் இருக்குமா என மும்பை நிர்வாகத்திடம் பல ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அத்துடன் இந்த வைரத்தை இந்தியாவும் இழந்து தவறு செய்யக்கூடாது என முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement