இவரா இப்படி? நட்சத்திர தமிழக வீரர் மீது வன்மத்தை காட்டிய யுவராஜ் சிங் ! ரசிகர்கள் அதிருப்தி

Yuvraj
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏப்ரல் 14-ஆம் தேதியன்று நடந்த 24-வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. நவி மும்பையில் மிகுந்த பரபரப்புடன் நடைப்பெற்ற அந்த போட்டியில் ராஜஸ்தானை விட பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்திய குஜராத் 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இதுவரை பங்கேற்ற தனது 5 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்து 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 192/4 ரன்கள் எடுத்தது.

ஒரு கட்டத்தில் 53/3 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக பேட்டிங் செய்து 52 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 87* ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அவருக்கு துணையாக இளம் வீரர் அபினவ் மனோகர் வெறும் 28 பந்துகளில் 43 ரன்கள் விளாச கடைசி நேரத்தில் பட்டை கிளப்பிய டேவிட் மில்லர் 14 பந்துகளில் 31* ரன்கள் விளாசி சூப்பரான பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

ராஜஸ்தான் தோல்வி:
அதை தொடர்ந்து 193 என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு தொடக்க வீரர் தேவதூத் படிக்கல் கோல்டன் டக் அவுட்டாகி நடையை கட்ட அடுத்துவந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 8 (8) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தெறிக்கவிடும் பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் பவர்பிளே முடிவதற்குள் வெறும் 24 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் 54 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதை பயன்படுத்திய குஜராத் அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 11 (11), ராசி வேன் டர் டுஷன் 6 (10) என முக்கிய வீரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து போட்டியை தனது பக்கம் திருப்பியது.

இறுதியில் சிம்ரோன் ஹெட்மையர் தனக்கே உரித்தான பாணியில் அதிரடியாக 29 (17) ரன்களை சேர்த்தாலும் அடுத்து வந்த ரியன் பராக் 18, நீசம் 17 போன்ற முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுத்த தவறியதால் 20 ஓவர்களில் 155/9 ரன்களை மட்டுமே எடுத்த ராஜஸ்தான் பரிதாபமாக தோற்றது. குஜராத் சார்பில் பந்துவீச்சில் அசத்திய யாஷ் தயாள் மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். இந்த தோல்வியால் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் தற்போது 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

அசத்தல் பட்லர்:
நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் தோற்றாலும் அந்த அணியின் பேட்டிங்கில் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து வெற்றிக்காக தனி ஒருவனாக போராடினார். அதற்கு முன்பாக பீல்டிங்கிலும் தீயாக வேலை செய்த அவர் குஜராத் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 12-வது ஓவரில் அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா அடித்த மின்னல் வேக பவுண்டரியை வேகமாக ஓடிவந்து தடுக்க முயன்ற ஜோஸ் பட்லர் அதற்காக டைவ் அடித்து சர்ரென பந்துக்கும் பவுண்டரிக்கும் இடையில் உள்ளே புகுந்து நிறுத்த முயன்றார்.

ஆனால் அந்த சமயத்தில் அவரின் கால்கள் பவுண்டரி ரோப்பை தொட்டதாக உணர்ந்த அவர் உடனடியாக அதை சோதிக்குமாறு அம்பயரிடம் கேட்டுக் கொண்டார். அதை ரீப்ளேயில் பார்த்த போது அவரின் கால்கள் பவுண்டரியை தொட்டதால் 4 ரன்களை அம்பயர்கள் வழங்கினர். இருப்பினும் அந்தத் தருணத்தில் ஜோஸ் பட்லர் மிகுந்த நேர்மையுடன் நடந்து கொண்டது பல ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

- Advertisement -

வன்மத்தை காட்டிய யுவி:
அதை பார்த்த முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது பின்வருமாறு. “கிரிக்கெட் விளையாட்டில் இன்னும் ஜோஸ் பட்லர் போன்ற ஒருசில ஜென்டில்மேன்கள் உள்ளார்கள். அவரைப் பார்த்து இதர வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக அவரின் அணியில் இருக்கும் வீரர்கள்” என்று பாராட்டும் வகையில் பதிவிட்டிருந்தார். ஆனால் கடைசி வரியில் “அவரின் அணியில் உள்ள வீரர்களும் அதை கற்றுக் கொள்ள வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டதை பார்த்த பல ரசிகர்கள் பட்லருடன் அதே அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை தான் அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்று அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த பதிவில் நேரடியாக யுவராஜ் சிங் அஸ்வின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் கடந்த 2019-ஆம் ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட அஸ்வின் இதே ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்ததால் கிரிக்கெட்டில் அவரின் நேர்முக தன்மை கடும் விமர்சனத்திற்கும் கேள்விக்கும் உள்ளானது.

இதையும் படிங்க : வாயி மட்டும் தான் பேசுது, செயல்பாடு ஒன்னுமே இல்ல – விமர்சனத்துக்கு உள்ளான இளம் இந்திய வீரர்

மேலும் அதே கால கட்டங்களில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஷ்வின் அதே அணியில் இடம் பிடித்திருந்த யுவராஜ் சிங்கை 11 பேர் அணியில் சேர்க்காமல் கழற்றிவிட்டார். அந்த வன்மத்தை தான் தற்போது அஷ்வின் மீது அவர் காட்டுகிறார் என்று ரசிகர்கள் யுவராஜை விளாசி வருகின்றனர். மேலும் அவரை போன்ற ஜாம்பவான் இப்படி வன்மத்தை காட்டுவார் என எதிர்ப்பார்க்கவில்லை என்றும் சில ரசிகர்கள் கூறுகின்றனர்.

Advertisement