2023 உ.கோ வாய்ப்பு போனா போகட்டும், இந்திய அணியில் இனியும் கம்பேக் கொடுக்க விரும்பல – நட்சத்திர வீரர் ஆதங்க பேட்டி

Shikhar Dhawan Bhuvneshwar Kumar
- Advertisement -

ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. அதில் சிறப்பாக விளையாடி 2011 போல கோப்பையை வெல்வதற்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சஹால், சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வு செய்யப்படாததும் ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவான் போன்ற சீனியர்கள் கழற்றி விடப்பட்டுள்ளதும் ஒரு தரப்பு ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதே போல அந்த அணியில் வேகப்பந்துவீச்சு துறையில் நட்சத்திர சீனியர் வீரர் புவனேஸ்வர் குமார் கழற்றி விடப்பட்டுள்ளதும் சில ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

உத்திரபிரதேசத்தை சேர்ந்த அவர் கடந்த 2012ஆம் ஆண்டு தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி புதிய பந்தை ஸ்விங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அந்த வகையில் நிறைய விக்கெட்களை எடுத்து நிலையான இடத்தை பிடித்த அவர் குறுகிய காலத்திலேயே 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை பவுலராக உருவெடுத்தார். அதே போல ஐபிஎல் தொடரிலும் சிதமாக பந்து வீசிய அவர் புவனேஸ்வர் குமார் என்றாலே துல்லியதற்கு பெயர் போனவர் என ரசிகர்களிடம் புகழ்பெற்றார்.

- Advertisement -

கம்பேக் ஐடியா இல்ல:
இருப்பினும் 2018இல் சந்தித்த காயத்திற்கு பின் சற்று தடுமாற்றமாக செயல்பட்டு வந்த அவர் 2021, 2022 டி20 உலகக் கோப்பைகளில் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதாலும் ஐபிஎல் 2023 தொடரில் சுமாராக செயல்பட்டதாலும் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் கழற்றி விடப்பட்டுள்ளார். மேலும் பும்ரா, சிராஜ் போன்ற அடுத்த தலைமுறை பவுலர்கள் வந்துவிட்டதால் இந்திய அணியில் அவருடைய கேரியர் முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது

ஆனாலும் 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் தற்போது யூபி டி20 தொடரில் சிறப்பாக செயல்படுவதால் கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் கம்பேக் கொடுப்பதற்காக எந்த முயற்சிகளையும் செய்யவில்லை என புவனேஸ்வர் குமார் வெளிப்படையாக பேசியுள்ளார். பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் இன்னும் சில வருடங்கள் மட்டுமே விளையாடப் போகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளும் போது மிகவும் வேதனையை கொடுக்கும்”

- Advertisement -

“அதனால் அந்த சமயத்தில் நீங்கள் மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புவீர்கள். அந்த நிலையில் தான் தற்போது நான் இருக்கிறேன். ஆம் நான் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை. அதே சமயம் அதற்காக வித்தியாசமாக முயற்சிப்பது அல்லது கம்பேக் கொடுப்பதற்காக திட்டமிடுவது போன்ற செயல்களில் நான் ஈடுபடவில்லை. மாறாக தற்சமயத்தில் கிடைத்த வாய்ப்பில் கவனத்துடன் விளையாடுகிறேன். குறிப்பாக கம்பேக் கொடுப்பதற்காக நான் விளையாடவில்லை”

இதையும் படிங்க: வீடியோ : கடைசி ஓவரில் 6, 6, 4.. அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு – வெறித்தனமான சதமடித்த நிக்கோலஸ் பூரான்

“எனவே நல்ல கிரிக்கெட்டை விளையாட முயற்சிக்கும் எனக்கு இந்திய அணியில் கம்பேக் கொடுப்பதற்கான வாய்ப்பு ஏற்படலாம். அதற்கு கிடைக்கும் வாய்ப்புகளில் நான் அசத்த வேண்டும். அதில் அனைத்தும் என் பக்கம் விழுந்தால் நிச்சயமாக கம்பேக் நிகழலாம். மேலும் நான் டெஸ்ட் அல்லது டி20 என எந்த வகையான கிரிக்கெட்டுக்கும் முன்னுரிமை கொடுக்காமல் அனைத்திலும் விளையாட விரும்புகிறேன். இப்படி எவ்வளவு வருடங்கள் விளையாட முடியும் என்பது தெரியாது” என்று கூறினார்.

Advertisement