- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பும்ராவை பாத்து பயமில்ல.. அவங்க எல்லாரும் அசத்தலன்னா இந்தியாவால் ஜெய்க்க முடியாது.. பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. 2007க்குப்பின் தோனி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் விளையாடியும் இங்கிலாந்து மண்ணில் இந்தியாவால் தொடரை வெல்ல முடியவில்லை.

அப்படிப்பட்ட நிலையில் இம்முறை சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. எனவே இம்முறை அனுபவமற்ற இந்திய அணியை தோற்கடித்து இங்கிலாந்து தொடரை வெல்வதற்கே பிரகாசமான வாய்ப்புள்ளது. அதே சமயம் உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா இங்கிலாந்துக்கு பெரிய சவாலைக் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

பும்ராவை பாத்து பயமில்ல:

ஏனெனில் கடந்த தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு அதன் சொந்த மண்ணில் சிம்ம சொப்பனமாக செயல்பட்ட பும்ரா 32 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவை பார்த்து தங்களுக்கு பயமில்லை என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இங்கிலாந்தில் வெற்றி பெறுவதற்கு இந்தியாவின் 11 வீரர்களும் அசத்த வேண்டுமென்று அவர் கூறியுள்ளார்.

எனவே மற்ற பவுலர்களை எளிதாக சமாளித்து இத்தொடரில் இந்தியாவை தோற்கடித்து இங்கிலாந்து வெல்லும் என்று ஸ்டோக்ஸ் மறைமுகமாக எச்சரித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எந்த பயமும் இல்லை. நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் எப்போதும் தரமான எதிரணிக்கு எதிராக விளையாடுகிறீர்கள். ஜஸ்ப்ரித் பும்ராவின் க்ளாஸ் என்ன என்பதும், அவரால் தம்முடைய அணிக்கு என்ன கொண்டு வர முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும்”

- Advertisement -

ஸ்டோக்ஸ் வெளிப்படை:

“ஆனால் அதற்காக அவரை நினைத்து எங்களுக்கு எந்த பயமும் கிடையாது. வெறும் ஒரு பவுலரால் மட்டும் தனியாளாக தொடரை வென்று கொடுக்க முடியும் என்று நான் கருதவில்லை. வெற்றிக்கு அனைத்து 11 வீரர்களும் உயர்ந்து நிற்க வேண்டும். 2 அணிகளிலுமே வெறும் ஒரு நபர் மட்டும் வெற்றிக்கான சாவியை வைத்திருப்பார் என்று நான் கருதவில்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க: பஸ்பாலை விட்டுட்டு இந்தியாவை தோற்கடிச்சு.. அந்த ஹாட்ரிக் அவமானத்தை நிறுத்துங்க.. பாய்காட் சவால்

இங்கிலாந்துக்கு எதிராக ஜஸ்ப்ரித் பும்ரா 14 போட்டிகளில் விளையாடி 60* விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 37* விக்கெட்டுகள் எடுத்த மிரட்டியுள்ளார். எனவே இம்முறையும் இங்கிலாந்துக்கு பும்ரா சவாலைக் கொடுப்பார் என்று நம்பலாம்.

- Advertisement -