பஸ்பாலை விட்டுட்டு இந்தியாவை தோற்கடிச்சு.. அந்த ஹாட்ரிக் அவமானத்தை நிறுத்துங்க.. பாய்காட் சவால்

Geoffery Boycott 2
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் இங்கிலாந்து வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வெளிநாடுகளில் தடுமாறினாலும் தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து மிகவும் வலுவான அணியாக செயல்பட்டு வருகிறது.

அதனாலேயே 2007க்குப்பின் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவிடம் ஒரு தொடரில் கூட தோற்காமல் இங்கிலாந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இதற்கிடையே ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற அனுபவமிக்க இந்திய வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளார்கள். அதனால் இம்முறை சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணியை இங்கிலாந்து எளிதாக தோற்கடிக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

ஹாட்ரிக் அவமானம்:

முன்னதாக பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் வந்த பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் அணுகு முறையை இங்கிலாந்து பின்பற்றுகிறது. அந்த அணுகுமுறையை பின்பற்றி சொந்த மண்ணில் அசத்தும் இங்கிலாந்து அணியால் வெளிநாடுகளில் வெற்றி காண முடியவில்லை. அதனால் தங்களுடைய சொந்த ஊரில் நடைபெற்ற 2021, 2023, 2025 ஆகிய 3 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இங்கிலாந்து அணியால் தகுதி பெற முடியவில்லை.

இந்நிலையில் இங்கிலாந்து அணி பஸ்பால் அணுகுமுறையை தூக்கி எறிந்து விட்டு சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் விளையாடி இந்தியாவை தோற்கடிக்க வேண்டுமென அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ஃஜெப்ரி பாய்காட் கூறியுள்ளார். இங்கிருந்து இங்கிலாந்து பொறுப்புடன் விளையாடி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாத அவமானத்தை 2027இல் நிறுத்த வேண்டுமென்று தெரிவிக்கும் அவர் இது பற்றி டெலிகிராஃப் இணையத்தில் கூறுவது பின்வருமாறு.

- Advertisement -

பாய்காட் சாடல்:

“இங்கிலாந்து பஸ்பால் கோபத்தை விட்டுவிட்டு பொது அறிவைப் பயன்படுத்தி இந்தியாவை தோற்கடிக்க வேண்டும். அவர்களுடைய ஆட்டம் சில நேரங்களில் திரில்லர் விருந்து படைப்பதாக இருக்கிறது. ஆனால் அவர்களுடைய பொறுப்பற்ற பேட்டிங் பல நேரங்களில் தோல்வியைக் கொடுக்கிறது. வெற்றி மட்டுமே அவர்களுடைய ஒரே சிந்தனையாக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட்: லீட்ஸ் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“ஏனெனில் கடந்த 3 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நம்முடைய சொந்த மண்ணில் நடைபெற்றது. அதில் விளையாட நம்மால் ஒருமுறை கூட தகுதிப் பெற முடியவில்லை என்று சொல்வதில் எந்த பயனுமில்லை. இதற்காக அவர்கள் சங்கடமான அவமானத்தைச் சந்தித்திருக்க வேண்டும். எனவே அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற வேண்டும் என்பதே இங்கிலாந்தின் இலக்காக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement