சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு அறிமுகமாகிய நிதீஷ் குமார் ரெட்டி கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 13 போட்டிகள் விளையாடி 303 ரன்களையும், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். பேட்டிங்கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி பந்து வீச்சிலும் கைகெடுக்க கூடிய அவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான கண்டுபிடிப்பாக பார்க்கப்பட்டார்.
எனக்கு சன் ரைசர்ஸ் அணிதான் முக்கியம் : நிதீஷ் ரெட்டி
அதனை தொடர்ந்து வெகுவிரைவாக இந்திய அணியில் இடம் பிடித்த அவர் இந்திய அணிக்காகவும் 4 டி20 போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதிலும் குறிப்பாக சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவர் சதம் விளாசியும் அசத்தியிருந்தார்.
இதன் காரணமாக 21 வயதான இந்த இளம் வீரருக்கு மிகப்பெரிய அளவில் அனைவரது மத்தியிலும் பாராட்டுக்கள் கிடைத்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்னதாக மற்ற ஐபிஎல் அணிகள் தன்னை மெகா ஏலத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் என் மீது தன் மீது நம்பிக்கை வைத்த அந்த அணியிலேயே தான் தொடர விரும்பியதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கடந்த ஆண்டு இறுதியில் எனக்கு ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க கோரிக்கைகள் சில அணிகளிடமிருந்து வந்தன. மேலும் நான் ஏலத்தில் பங்கேற்கும் பட்சத்தில் என்னை பெரிய விலை கொடுத்து வாங்குவதாக உறுதி அளித்தார்கள். ஆனால் நான் ஹைதராபாத் அணியை விட்டு வெளியேற விரும்பவில்லை. ஏனெனில் இந்த அணி என்னுடைய வீடு போன்றது.
அவர்களே எனது திறமையை நம்பி எனக்கு முதல் வாய்ப்பினை கொடுத்தார்கள். என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த அந்த அணிக்காக நான் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். அதுமட்டுமின்றி ஹைதராபாத் அணிக்காக ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதும் என்னுடைய விருப்பம் என நிதீஷ் குமார் ரெட்டி கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை கலாய்த்து அவமானத்திய பாகிஸ்தான் பிஎஸ்எல் அணி.. ரசிகர்கள் பதிலடி
மேலும் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் தங்களது அணியை மிகச்சிறப்பாக வழிநடத்துவதாகவும் அவர் தனக்கு அளிக்கும் சுதந்திரம் மற்றும் ஆதரவு காரணமாகவும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது என்றும் நிதீஷ் ரெட்டி கூறியது குறிப்பிடத்தக்கது.



