ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா கோப்பையை வென்றது. பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சனைகளால் தங்களது போட்டிகளை துபாயில் விளையாடிய தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்றது. அதனால் 2002, 2013, 2025* ஆகிய 3 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்ற முதல் அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது.
மேலும் 2024 டி20 உலகக் கோப்பையின் வென்ற ரோகித் சர்மா ஜாம்பவான் எம்எஸ் தோனிக்கு பின் ஒன்றுக்கும் மேற்பட்ட ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய கேப்டனாக சாதனை படைத்தார். மறுபுறம் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களுமே பாகிஸ்தான் அணியை திட்டி தீர்த்தனர்.
கலாய்த்த பாகிஸ்தான்:
இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் 2025 பிஎஸ்எல் தொடர் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறும் அந்தத் தொடரில் 6 அணிகள் விளையாடுகின்றன. அந்தத் தொடருக்கான கோப்பை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஒரு பாகிஸ்தான் பாரம்பரிய உடைகளை அணிந்திருக்கும் நபரைப் போன்ற பொம்மை கோப்பையை அறிமுகப்படுத்தியது.
ஆனால் அந்த பொம்மை இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் குரலில் பேசியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அடிக்கடி சிறு விஷயங்களை மறக்கக்கூடியவர் என்பதை அறிவோம். அப்படிப்பட்ட 2025 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றி 2023இல் தவறிய உலகக் கோப்பைக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல என்று கூறினார்.
ரசிகர்கள் பதிலடி:
அப்படி சொல்லும் போது உலகக்கோப்பை என்ற பெயரை ரோகித் சர்மா மறந்து விட்டார். அதனால் சில நொடிகள் ரோகித் சர்மா தடுமாற்றமாக பேசினார். அவருடைய அந்த தடுமாற்ற பேச்சுக் குரலை எடுத்து 2025 பிஎஸ்எல் கோப்பையை பொம்மை அறிமுகப்படுத்துவதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். அந்த வீடியோவை முல்தான் சுல்தான்ஸ் பிஎஸ்எல் அணி இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவையும் அவருடைய மறக்கும் குணத்தையும் கலாய்க்கும் வகையில் பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க: 44 பந்தில் 100.. தடவல் நாயகர்களை வீட்டுக்கு அனுப்புங்க.. பாபரை முந்திய இளம் பாகிஸ்தான் வீரர் சரவெடி சாதனை
அதைப் பார்க்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி தொடரில் செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாத நீங்கள் கோப்பையை வென்ற ரோஹித் சர்மா குரலைப் பயன்படுத்த தகுதியற்றவர்கள் என்று பதிலடி கொடுக்கின்றனர். மேலும் இந்திய கேப்டனை அவமானப்படுத்துவதாக நினைத்து நீங்களே தான் உங்களை அவமானப்படுத்திக் கொள்கிறீர்கள் என்றும் ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.