44 பந்தில் 100.. தடவல் நாயகர்களை வீட்டுக்கு அனுப்புங்க.. பாபரை முந்திய இளம் பாகிஸ்தான் வீரர் சரவெடி சாதனை

Hasan Nawaz
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்சமயத்தில் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சமீப காலங்களில் பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் தோற்ற அந்த அணி ஜிம்பாப்வே, அமெரிக்க போன்ற கத்துக்குட்டிகளிடம் தோல்வியை சந்தித்தது. அதே போல கடந்த வருடம் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது.

அப்படியே 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் சொந்த மண்ணில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் பாகிஸ்தான் பரிதாபமாக வெளியேறியது. அந்த தோல்விகளுக்கு முகமது ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோர் முக்கிய காரணமாக அமைந்தனர். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அவர்கள் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் தடவலாக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தனர்.

- Advertisement -

தடவல் நாயகர்கள்:

அதனால் அடுத்து நடைபெறும் நியூசிலாந்து டி20 தொடரில் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் சல்மான் ஆகா தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் தோற்றது.

ஆனால் மார்ச் 21ஆம் தேதி ஆக்லாந்து நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் நியூசிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 19.5 ஓவரில் 204 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மார்க் சேப்மேன் 94 (44) ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

சரவெடி சாதனை:

அடுத்து விளையாடிய பாகிஸ்தானுக்கு 22 வயதாகும் இளம் வீரர் ஹசன் நவாஸ் நியூசிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கி 10 பவுண்டரி 7 சிக்ஸருடன் 105* (55) ரன்கள் விளாசினார். அவருடன் முகமது ஹாரிஸ் 41 (20), கேப்டன் சல்மான் ஆகா 51* (31) ரன்கள் எடுத்தனர். அதனால் 16 ஓவரிலேயே 207-1 ரன்களை எடுத்து வெற்றி பெற்ற பாகிஸ்தான் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

இதையும் படிங்க: இந்தியா சொல்றதை நம்பாதீங்க.. ஐசிசி தான் 3 பில்லியன் தரனும்.. பாகிஸ்தானுக்கு நஷ்டமே இல்ல.. நிர்வாகி பேட்டி

இப்போட்டியில் 44 பந்துகளில் சதத்தை அடித்துள்ள ஹசன் நவாஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வேகமாக சதத்தை அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சரவெடி சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் 2021இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பாபர் அசாம் 49 பந்துகளில் சதத்தை அடித்ததே முந்தைய சாதனை. இதைப் பார்க்கும் ஒரு தரப்பு பாகிஸ்தான் ரசிகர்கள் பேசாமல் பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் விளையாடாமல் வீட்டிலேயே இருக்கட்டும் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement