இந்தியா சொல்றதை நம்பாதீங்க.. ஐசிசி தான் 3 பில்லியன் தரனும்.. பாகிஸ்தானுக்கு நஷ்டமே இல்ல.. நிர்வாகி பேட்டி

PCB India
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் துவங்கி துபாயில் முடிந்தது. அந்தத் தொடரில் துபாயில் விளையாடிய இந்தியா தோல்வியே சந்திக்காமல் 12 வருடங்கள் கழித்து சாம்பியன்ஸ் டிராபியை முத்தமிட்டு சாதனை படைத்தது. மறுபுறம் சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறாத அணி என்ற மோசமான உலக சாதனையுடன் பாகிஸ்தான் லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது.

முன்னதாக 2008இல் இலங்கை அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலால் பாகிஸ்தானுக்கு வெளிநாட்டு அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தடை செய்தன. அதனால் பின்னடைவை சந்தித்த பாகிஸ்தான் கடுமையான போராட்டத்திற்கு பின் சமீப வருடங்களாக வெளிநாட்டு அணிகளை தங்கள் ஊருக்கு வர வைத்து விளையாடி வருகிறது. அதை வைத்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை நடத்தும் உரிமையையும் ஐசிசியிடம் பாகிஸ்தான் வாங்கியது.

- Advertisement -

85% நஷ்டம் இல்ல:

எனவே 1996க்குப்பின் தங்கள் நாட்டில் நடைபெறும் ஐசிசி தொடரை வெற்றிகரமாக நடத்த பாகிஸ்தான் பல கோடி ரூபாய்களை செலவழித்தது. குறிப்பாக லாகூர், கராச்சி, ராவல்பிண்டி நகரங்களில் உள்ள மைதானங்களை 869 பாகிஸ்தான் கோடி ரூபாயில் அந்நாட்டு வாரியம் புதுப்பித்தது. மேலும் வெளிநாட்டு அணிகளுக்கு பாதுகாப்பை வழங்க ஏராளமான செலவும் செய்யப்பட்டன.

ஆனால் கடைசியில் பாகிஸ்தான் மோசமாக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் மற்ற அணிகள் விளையாடிய போட்டிகளில் அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து பெரிய ஆதரவுக் கொடுக்கவில்லை. எனவே ஸ்பான்சர்சிப் மற்றும் டிக்கெட் விற்பனை வெகுவாக குறைந்தது. அதனால் பாகிஸ்தான் வாரியத்திற்கு 85% வரை நஷ்டம் ஏற்பட்டதாக இந்தியா, இங்கிலாந்தைச் சேர்ந்த ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

- Advertisement -

இந்தியாவை நம்பாதீங்க:

இந்நிலையில் இந்திய ஊடகங்கள் சொல்வதை நம்பாதீர்கள் என்று பாகிஸ்தான் வாரியத்தின் செய்தி தொடர்பாளர் அமைர் மிர், பொருளாதார இயக்குனர் ஜாவேத் முர்டசா மறுத்தள்ளனர். இது பற்றி மிர் பேசியது பின்வருமாறு. “தொடரை நடத்தியதற்கான அனைத்து செலவுகளும் ஐசிசியை சேர்ந்தது. பாகிஸ்தான் வாரியத்துக்கு நுழைவுக் கட்டணம் மற்றும் டிக்கெட் விற்பனையால் வருமானம் கிடைத்துள்ளது”

இதையும் படிங்க: வெறும் 16 ஓவரில் 207 ரன்ஸ்.. நியூஸிலாந்து சூறையாடிய பாகிஸ்தான் 18 வருட உலக சாதனை.. எழுச்சிக்கான அடித்தளமா?

“இது போக வரவு செலவு சோதனைகளுக்குப்பின் நாங்கள் ஐசிசியிடம் இருந்து 3 பில்லியன் டாலர்கள் பெறுவோம் என்று எதிர்பார்க்கிறோம். உண்மையில் 2 மில்லியன் தான் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இந்த நிதியாண்டில் எங்களுக்கு 10 மில்லியன் மற்றும் 40% கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. அதனால் உலகின் டாப் 3 பணக்கார வாரியங்களில் ஒன்றாக இருக்கும் நாங்கள் 40 மில்லியனை வரியாகக் கட்டுகிறோம்” எனக் கூறினார்.

Advertisement