வெறும் 16 ஓவரில் 207 ரன்ஸ்.. நியூஸிலாந்து சூறையாடிய பாகிஸ்தான் 18 வருட உலக சாதனை.. எழுச்சிக்கான அடித்தளமா?

PAK vs NZ
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பாகிஸ்தான் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற நியூசிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் மார்ச் 21ஆம் தேதி இந்திய நேரப்படி முற்பகல் 11.45 மணிக்கு துவங்கிய 3வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் செய்வதாக அறிவித்தது.

ஆக்லாந்து நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பேட்டிங் துவங்கிய நியூசிலாந்துக்கு டிம் சைபஃர்ட் 19, ஃபின் ஆலன் 0, டேரில் மிட்சேல் 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் மார்க் சாப்மேன் பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கி 11 பவுண்டரி 4 சிக்சருடன் அரை சதத்தை கடந்து 94 (44) ரன்கள் விளாசி அவுட்டானார். இருப்பினும் ஜிம்மி நீசம் 3, மிட்சேல் ஹே 9 ரன்களில் அவுட்டாகி மீண்டும் பின்னடைவைக் கொடுத்தனர்.

- Advertisement -

பாகிஸ்தான் சரவெடி:

இறுதியில் கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடியாக 31 (18) ரன்கள் எடுத்த உதவியுடன் 19.5 ஓவரில் நியூஸிலாந்து 204 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி 2, அபாஸ் அப்ரிடி 2, அப்ரார் அகமது 2, ஹரிஷ் ரவூப் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்ததாக களமிறங்கிய பாகிஸ்தானுக்கு முகமது ஹாரிஸ் – ஹசன் நவாஸ் ஆகியோர் சரவெடியாக விளையாடினர்.

5.5 ஓவரில் நியூசிலாந்து பவுலர்களை பட்டையை கிளப்பிய அந்த ஜோடி 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த போது ஹாரிஸ் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 41 (20) ரன்னில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் நியூசிலாந்து பவுலர்களை சூறையாடிய ஹசன் நவாஸ் 44 பந்துகளில் சதத்தை அடித்து 10 பவுண்டரி 7 சிக்ஸருடன் 105* (45) ரன்களை 233.33 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

உலக சாதனை:

அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் சல்மான் ஆகா தனது பங்கிற்கு மிரட்டலாக விளையாடி 51* (31) ரன்கள் எடுத்தார். அதனால் 16 ஓவரிலேயே 207-1 ரன்களை எடுத்த பாகிஸ்தான் 9 வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்று நியூசிலாந்துக்கு பதிலடிக் கொடுத்தது. மேலும் 2 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரை வெல்லும் வாய்ப்பையும் பாகிஸ்தான் தக்க வைத்துக் கொண்டது.

அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200+ ரன்களை வேகமாக (16 ஓவரில்) சேசிங் செய்த அணி என்ற உலக சாதனையையும் பாகிஸ்தான் படைத்துள்ளது. இதற்கு முன் 2007இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தென்னாபிரிக்கா 17.4 ஓவரில் 200+ ரன்களை சேசிங் செய்ததே முந்தைய சாதனை. சமீப காலங்களில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பாகிஸ்தான் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க: நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதை செய்ய முடியும்.. அதுக்காக ட்ரை பண்ணுவேன் – வெங்கடேஷ் ஐயர் நம்பிக்கை

அதனால் இந்தத் தொடரில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் போன்ற மூத்த வீரர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுடன் பாகிஸ்தான் களமிறங்கியுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் இந்த வெற்றி பாகிஸ்தான் கிரிக்கெட்டில் எழுச்சியை உருவாக்கும் என்று அந்நாட்டு ரசிகர்கள் நம்புகின்றனர்

Advertisement