- Advertisement -
ஐ.பி.எல்

தயவுசெய்து தவறான விடயங்களை பரப்பாதீங்க.. சி.எஸ்.கே ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட – நிதீஷ் ரெட்டி

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடியிருந்த வேளையில் கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இம்முறை பேட் கம்மின்ஸ் தலைமையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டி வரை சென்றது. கடைசியாக நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்து சாம்பியன் பட்டத்தை அவர்கள் தவறவிட்டிருந்தாலும் இந்த ஆண்டு பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு சேர்த்து பல்வேறு சாதனை போட்டிகளிலும் விளையாடி இருந்தனர்.

அந்த வகையில் இந்த தொடர் முழுவதுமே சன் ரைசர்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டதற்கு சில இளம் வீரர்களும் முக்கிய காரணம். அந்த வகையில் சன் ரைசர்ஸ் அணியின் கடந்த ஆண்டு கண்டுபிடிப்பாக இளம் ஆல்ரவுண்டரான நிதிஷ் ரெட்டி பார்க்கப்படுகிறார். ஆந்திராவைச் சேர்ந்த நிதிஷ் ரெட்டி நடப்பு தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 142 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 303 ரன்களை குவித்து அசத்தினார்.

- Advertisement -

அதோடு பந்துவீச்சிலும் அவர் கைகொடுக்க கூடிய அளவிற்கு சிறப்பாக செயல்பட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தோனி குறித்து அளித்த ஒரு பேட்டி தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரியளவு விமர்சனம் மற்றும் எதிர்ப்பை சந்தித்தது. அதாவது தோனி குறித்து பேசியிருந்த நிதிஷ் ரெட்டி :

“தோனியிடம் திறமை இருக்கிறது ஆனால் அவரிடம் டெக்னிக் இல்லை” அதாவது விராட் கோலி அளவுக்கு தோனியிடம் பேட்டிங் டெக்னிக் இல்லை என்று பேசியதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியது. அதனை கண்ட சிஎஸ்கே ரசிகர்கள் அனைவரும் நிதிஷ் ரெட்டியை எதிர்த்து சில காட்டமான கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் சிஎஸ்கே ரசிகர்களின் இந்த எதிர்ப்பிற்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், மன்னிப்பு கேட்கும் வகையிலும் அவர் ஒரு முக்கிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : “நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். என்னிடம் திறமை முக்கியமா? அல்லது மனநிலை முக்கியமா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதில் நான் மனநிலை தான் முக்கியம் என்று பதில் அளித்தேன். அப்போது தோனியை அதற்கு உதாரணமாக கூறினேன். வெற்றியை தீர்மானிப்பதில் மனநிலை முக்கிய பங்கு வகிப்பதாக நம்புகிறேன் என்று தெரிவித்திருந்தேன்.

இதையும் படிங்க : கவுதம் கம்பீர் எந்த அளவுக்கு ஒரு சோம்பேறி தெரியுமா? சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்த – தினேஷ் கார்த்திக்

என்னுடைய இந்த பேட்டியை யாரோ சிலர் முழுவதுமாக வெளியிடாமல் கத்தரித்து வெளியிட்டுள்ளனர். அதனால் தோனியின் ரசிகர்கள் என் மீது எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தயவுசெய்து தவறான விடயங்களை பகிர வேண்டாம். முழுக்கதையையும் கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள் என்று விளக்கமளித்ததோடு சேர்த்து அந்த முழு வீடியோவையும் அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -