“ராயல்டி இஸ் பிங்க்” கொல்கத்தா அணி கழட்டிவிட்ட பிறகு கடுப்பாகிய நிதிஷ் ராணா – அவரது மனைவியும் விளாசல்

Nitish-Rana
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வரும் கொல்கத்தா அணியானது மெகா ஏலத்திற்கு முன்னதாக அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை விடுவித்து அதிரடி காண்பித்தது.

கொல்கத்தா அணியை விட்டு விளாசிய நிதிஷ் ராணா :

அதோடு அந்த அணியில் ரிங்கு சிங், சுனில் நரேன், ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகிய ஆறு வீரர்களை 57 கோடி ரூபாயில் தக்கவைத்தது. அதனை தவிர்த்து மீதமுள்ள தொகைக்கு தொகையைக் கொண்டு ஏலத்திற்கு சென்று கொல்கத்தா அணியானது பெரிய தொகையாக 23 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வெங்கடேஷ் ஐயரை ஏலத்தில் எடுத்து ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

அதேசமயம் ஏழு ஆண்டுகளாக அந்த அணிக்கு உண்மையான விசுவாசத்துடன் விளையாடி வந்த நிதிஷ் ராணாவை அவர்கள் ஏலத்தில் கண்டுகொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. ஏனெனில் கடைசி ஏழு ஆண்டுகளில் கொல்கத்தா அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர்களின் முதல் நான்கில் ஒருவராக நிதிஷ் ராணா இருந்து வருகிறார்.

அதோடு மட்டுமின்றி 2023-ஆம் ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனபோது கொல்கத்தா அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு அந்த அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தி இருந்தார். இப்படி கொல்கத்தா அணிக்காக மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்திருந்த அவரை ஏலத்தில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கொல்கத்தா அணி ஏலத்தின் போது அவரை கண்டுகொள்ளவே இல்லை.

- Advertisement -

இறுதியில் ராஜஸ்தான் அணி அவரை 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் இந்த செயலால் அதிருப்தியடைந்த நிதிஷ் ராணாவின் மனைவி தனது சமூக வலைதள பக்கத்தில் : “விஸ்வாசம் என்பது விலை உயர்ந்தது”, அதை எல்லோராலும் வாங்க முடியாது” என்று வார்த்தைகளால் கொல்கத்தா அணியை விளாசியுள்ளார்.

இதையும் படிங்க : என்னது என் பையன் வயசை ஏமாத்தி பொய் சொல்றாரா? 13 வயது வைபவ் சூர்யவன்ஷி தந்தை – அளித்த விளக்கம்

அதேபோன்று நிதிஷ் ராணா கொல்கத்தா அணி தன்னை நிராகரித்த பிறகு : பிங்க் நிற டி-ஷர்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “ராயல்டி இஸ் பிங்க்” என்ற வார்த்தைகளை பகிர்ந்து மறைமுகமாக எனது விஸ்வாசம் இனி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தான் என்பதை சுட்டிக் காண்பித்துள்ளார். இப்படி இவர்கள் இருவருமே பகிர்ந்துள்ள இந்த இரு பதிவுகளும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement