2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவில் நவம்பர் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் நடைபெற்று முடிந்தது. இந்த ஐபிஎல் ஏலத்தில் பல்வேறு வீரர்கள் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் சென்று ஆச்சரியத்தை அளித்தனர். அதேபோன்று வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் பலர் ஏலத்தில் அடிப்படை தொகைக்கு கூட வாங்கப்படாமல் விற்காமல் போயுள்ளனர். இப்படி ஆச்சரியங்களும், வியப்பும் கலந்த ஒரு ஏலம் நடைபெற்று முடிந்துள்ளது.
உண்மை என்னனு அவங்களுக்கு தெரியும் :
இந்த ஏலத்தில் யாருமே எதிர்பாராத வகையில் 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை 1 கோடியே 10 லட்ச ரூபாய் என்கிற விலைக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் இப்படி ஐபிஎல் வரலாற்றில் மிக குறைந்த வயதிலேயே கோடிகளில் சென்ற முதல் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளதால் அவர் குறித்த தேடலும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷிக்கு தற்போது 13 வயதில்லை என்றும் அவருக்கு இப்போது 15 வயது ஆகிறது என்றும் சில நெட்டிசன்கள் அவர் பேசிய பழைய வீடியோவை பகிர்ந்து ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஒரு பேட்டி ஒன்றில் பேசிய வைபவ் சூர்யவன்ஷி விரைவில் 14 வயதை எட்ட இருப்பதாக பேசியிருந்தார்.
அதனை தொடர்ந்து இந்த ஆண்டு கணக்கின்படி அவருக்கு பதினைந்து வயது ஆகியிருக்கும் என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு பதிலளித்துள்ள வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை கூறுகையில் : என்னுடைய மகனை எட்டரை (8,1/2)வயதில் நான் பிசிசிஐ சோதனைக்கு உட்படுத்தி விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்ற வைத்துள்ளேன். ஏற்கனவே அவர் பிசிசியின் சோதனைகளில் தேர்ச்சி அடைந்து 19 வயதுக்குட்பட்டோர் அணியிலும் விளையாடிவிட்டார்.
அதனால் நாங்கள் இந்த குற்றச்சாட்டு குறித்து எதுவும் பயப்பட தேவையில்லை. உண்மை என்னவென்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ-க்கு தெரியும். மீண்டும் வயது சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை. என்னுடைய மகன் சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் கனவுடன் இவ்வளவு தூரம் முன்னேறி வந்துள்ளார். அவருக்காக நான் எனது நிலத்தை விற்று பயிற்சி செய்ய வசதிகளை செய்து கொடுத்துள்ளேன்.
இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்தியை பார்த்து எனக்கும் அந்த நம்பிக்கை வந்துடுச்சி – வெங்கடேஷ் ஐயர் மகிழ்ச்சி
நிதி சிக்கல்கள் இன்னும் எங்களுக்கு உள்ளன. அவனுடைய எதிர்காலத்திற்கு கிரிக்கெட் பின்புலகமாக இருக்கும் என்பதால் நான் மிகவும் உதவி வருகிறேன். நிச்சயம் என்னுடைய மகன் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி பெரிய வீரராக வருவார் என வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை கூறியது குறிப்பிடத்தக்கது.



