வருண் சக்கரவர்த்தியை பார்த்து எனக்கும் அந்த நம்பிக்கை வந்துடுச்சி – வெங்கடேஷ் ஐயர் மகிழ்ச்சி

Venky
- Advertisement -

சவுதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலத்தில் இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போனது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது. குறிப்பாக ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போனவராக ரிஷப் பண்ட் 27 கோடிக்கு விலைபோகி சாதனை நிகழ்த்தினார். அவரை ஷ்ரேயாஸ் ஐயர் 26 கோடி 75 லட்சத்திற்கு எடுக்கப்பட்ட வேளையில் மூன்றாவது மிகப்பெரிய விலைக்கு வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணியால் மீண்டும் வாங்கப்பட்டார்.

நிச்சயம் இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பேன் :

கடந்த சில ஆண்டுகளாகவே கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்துவரும் அவரை கொல்கத்தா அணி தக்கவைக்காமல் இருந்திருந்தாலும் மெகா ஏலத்தின் போது மிகப்பெரிய போட்டிக்கு மத்தியிலும் அவரை 23 கோடியே 75 லட்சம் கொடுத்து மிகப்பெரிய தொகைக்கு மீண்டும் தங்களது அணியில் எடுத்துள்ளது. இதன் மூலம் கொல்கத்தா அணி அவர் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளது என்பதை இந்த ஏலம் வெளிக்காட்டி உள்ளது.

- Advertisement -

அதோடு கொல்கத்தா அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இம்முறையும் தொடர்ச்சியான தனது சிறப்பான பங்களிப்பை அளிக்க காத்திருக்கிறார். இந்நிலையில் கொல்கத்தா அணி தன்னை இப்படி மிகப்பெரிய தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெங்கடேஷ் ஐயர் கூறுகையில் : இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் நான் வெற்றி பெற்ற ரன்களை அடித்ததில் மகிழ்ச்சி.

வின்னிங் ரன்சை அடிக்கும் போது என்னுடைய மனது முழுமையாக இருந்தது. டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை ரிஸ்க் எடுப்பது என்பது எப்போதுமே முக்கியம். ரிஸ்க் எடுத்தால் நிச்சயம் அதற்கு ஏற்ற பலன் நமக்கு கிடைக்கும். ஒரு பந்தை அடிக்க நினைத்தால் நிச்சயம் அதனை அடித்துப் பார்க்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை. விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். ஆனால் முயற்சி செய்யாமல் இருக்க கூடாது.

- Advertisement -

எனவே சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் நான் அடிக்கச் செல்வேன் கொல்கத்தா அணி என் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்ததற்கு நிச்சயம் மகிழ்ச்சி அடைகிறேன். அதோடு இம்முறையும் நான் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த காத்திருக்கிறேன். வருண் சக்கரவர்த்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருவது மிகவும் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்ட பின் தீபக் சாஹரின் மனைவி வெளியிட்ட – உருக்கமான பதிவு

அதேபோன்று நானும் இனிவரும் போட்டிகளில் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்தி கடுமையாக உழைத்து நிச்சயம் இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பேன். வருண் சக்கரவர்த்தி மூன்று ஆண்டுகள் காத்திருந்து இந்திய அணியில் இடம் பிடிக்கும் முடியும் என்று காண்பித்துள்ளதால் அதே நம்பிக்கையுடன் நானும் இந்திய அணிக்காக திரும்பும் முயற்சிகளில் ஈடுபட உள்ளேன் என வெங்கடேஷ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement