மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்ட பின் தீபக் சாஹரின் மனைவி வெளியிட்ட – உருக்கமான பதிவு

Jaya
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை கோப்பையை வென்ற அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாகர் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரை மெகா ஏலத்திற்கு முன்னதாக தக்க வைக்காத சென்னை அணியானது மெகா ஏலத்தின் போதும் குறிப்பிட்ட தொகை வரை எடுக்க முயற்சித்தாலும் பின்னர் மும்பை அணியிடம் அவரை இழந்தது.

சி.எஸ்.கே அணியை மறக்கவே முடியாது :

இந்த ஐபிஎல் தொடரில் 9.25 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு மும்பை அணி தீபக் சாகரை ஏலத்தில் எடுத்துள்ளது. இதன்மூலம் பும்ரா, தீபக் சாகர், ட்ரெண்ட் போல்ட் என மிகச் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களுடன் மும்பை அணி அடுத்த ஐபிஎல் தொடரில் களமிறங்கி இருக்கிறது. அதே வேளையில் சென்னை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக பார்க்கப்பட்ட அவர் தற்போது சிஎஸ்கே-வில் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை அணியில் இணைந்த அவர் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்ற 2018, 2021, 2023 என மூன்று ஆண்டுகளில் முதன்மை வீரராக சி.எஸ்.கே அணியில் இருந்துள்ளார். அதுமட்டும் இன்றி மொத்தமாக சென்னை அணிக்காக 76 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 81 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி பவர்பிளே ஸ்பெசலிஸ்ட்டாகவும் சென்னை அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வந்தார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணி அவரை தேர்வு செய்ய முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள தீபக் சாகரின் மனைவி தனது சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : முதல் முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் ஆரவாரம் செய்தது முதல் அனைத்துமே எனக்கு ஞாபகம் இருக்கிறது.

- Advertisement -

சென்னை அணிக்காக விளையாடிய போது மைதானத்திலேயே தீபக் சாகர் காதலை வெளிப்படுத்தி அதனை நான் ஏற்றுக்கொண்டது வரை எங்களுக்கும் சிஎஸ்கே அணிக்குமான நினைவுகள் நிறைய இருக்கின்றன. இந்த அற்புதமான நினைவுகளுக்கு நாங்கள் இருவருமே கடமைப்பட்டுள்ளோம். என்றைக்குமே சிஎஸ்கே அணியிடம் இருக்கும் பிணைப்பை நாங்கள் மறக்க மாட்டோம் என நெகிழ்ச்சியான ஒரு கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க : சச்சின், கோலி மாதிரி ஜெய்ஸ்வாலிடம் இது இருக்கு.. இந்தியாவின் சிஸ்டத்தை ஆஸி பாக்கனும்.. கிரேக் சேப்பல்

அதேபோன்று மும்பை அணிக்காக வாங்கப்பட்ட தீபக் சாகர் பேசுகையில் : வான்கடே மைதானத்தில் என்னால் சரியாக பந்துவீச முடியும் என்று கூறியிருந்தாரே தவிர மற்றபடி பெரிய அளவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. இதன் மூலம் அவரது உள்மனதில் இன்னும் சிஎஸ்கே தான் அவரது முதன்மை அணியாக இருப்பது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement