ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சந்தித்த மோசமான தோல்வியிலிருந்து இந்தியா மீண்டெழுந்தது. அத்துடன் 1 – 0* என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி தோற்கும் என்று தெரிவித்த ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பதிலடியும் கொடுத்துள்ளது.
முன்னதாக அந்த போட்டியில் விராட் கோலி, ராகுல் மற்றும் கேப்டனாக செயல்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தங்களுடைய அனுபவத்தை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் அசத்தினார்கள். ஆனால் 22 வயதாகும் ஜெய்ஸ்வால் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடினார். அந்த வாய்ப்பில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான அவர் இரண்டாவது இன்னிங்ஸில் தவறை திருத்திக்கொண்டு 161 ரன்கள் அடித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
பயமற்ற ஜெய்ஸ்வால்:
மறுபுறம் 25 வயதாகும் ஆஸ்திரேலிய வீரர் நாதன் மெக்ஸ்வீனி அதே போட்டியில் அறிமுகமாகி சொந்த மண்ணில் சுமாராக விளையாடினார். இந்நிலையில் சச்சின், கோலி போல பயமின்றி விளையாடும் திறமை ஜெய்ஸ்வாலிடம் இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கிரேக் பாராட்டியுள்ளார். மேலும் இந்தியாவைப் பார்த்து ஆஸ்திரேலியா தங்களுடைய உள்ளூர் கிரிக்கெட்டுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அப்போது தான் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் கிடைப்பார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இளம் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அச்சமற்றவர். விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் போல இந்திய பேட்டிங் சிறப்பின் கவசத்தை அடுத்ததாக பெற தயாராக இருக்கிறார். அவருடைய பயணம் இந்தியாவின் திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை உலக கிரிக்கெட்டில் அவர்களுக்கு தெளிவான விளிம்பை அளிக்கிறது என்பதை காட்டுகிறது”
இந்தியாவின் சிஸ்டம்:
“ஆஸ்திரேலியாவின் நேதன் மெக்ஸ்வீனியுடன் அவரை ஒப்பிட்டு பார்ப்பது வெளிச்சத்தை தரும். 22 வயதில் ஜெய்ஸ்வால் ஏற்கனவே 14 டெஸ்ட், 30 முதல் தரம் 32 லிஸ்ட் ஏ, 53 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். மறுபுறம் மெக்ஸ்வீனி கணிசமான உள்ளூர் போட்டிகளில் விளையாடி அறிமுகமாகியுள்ளார். இந்தியாவின் சிஸ்டம் இளம் அளவிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுக்கிறது”
இதையும் படிங்க: 13 வயது பையன் சூர்யவன்சியை ராஜஸ்தான் வாங்க இது தான் காரணம்.. புதிய அணி பற்றி கோச் டிராவிட் பேட்டி
“இந்தியாவின் அண்டர் 19 அணிகள் மற்ற நாடுகளுடன் விளையாடுகிறார்கள். அது போட்டியை பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு கொடுக்கிறது. மறுபுறம் இளம் வயதில் போட்டியான போட்டிகள் இல்லாததால் ஆஸ்திரேலிய வீரர்கள் சர்வதேச தேவைகளுக்கு தயாராக இல்லை. எனவே அடிப்படை சிஸ்டத்தில் மாற்றங்கள் இல்லையெனில் நாம் பின்தங்கும் அபாயம் உள்ளது” என்று கூறினார்.



