சர்பராஸ் கானை அடுத்து இந்திய அணித்தேர்வின் மீதான தனது அதிருப்தியினை வெளிப்படுத்திய – இந்திய வீரர்

Nitish-Rana
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் மூன்று விதமான தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு அடுத்து இந்திய அணி இந்த ஆண்டு இறுதிவரை தொடர்ச்சியாக அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதிலும் குறிப்பாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்க இருக்கிறது.

அதன் காரணமாக இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அடுத்து நடைபெறயிருக்கும் அயர்லாந்து தொடருக்காக முதன்மை அணிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இரண்டாம் தர இந்திய அணியே இந்த அயர்லாந்து தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு சீனாவில் நடைபெற இருக்கும் ஏசியன் கேம்ஸ் போட்டிகளில் இந்திய அணி முதல் முறையாக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடயிருக்கிறது.

- Advertisement -

அந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ருதுராஜ் கெய்க்வாட்டின் தலைமையில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிப்பாதி, திலக் வர்மா, ஜித்தேஷ் சர்மா உள்ளிட்ட பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனாலும் உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கும் சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொல்கத்தா அணியின் கேப்டனான நித்திஷ் ரானாவிற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து அவர் இந்திய அணித்தேர்வின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் : ஹார்ட் ப்ரோக்கன் இமோஜி ஒன்றினை வெளியிட்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய அவர் 413 ரன்களை குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அவரை இந்த ஏசியன் கேம்ஸ் தொடரில் தேர்வு செய்யாததனாலே அவர் இது போன்ற ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : விராட், ரோஹித் டி20 கேரியர் முடிகிறதா? 2023 உ.கோ உட்பட பல முக்கிய முடிவுகளை எடுக்க வெ.இ பறக்கும் அஜித் அகர்கர்

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பிற்காக காத்திருக்கும் சர்ஃபராஸ் கான் மணமடைந்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வரும் வேளையில் தற்போது நித்திஷ் ராணாவும் அடுத்ததாக இப்படி இதயம் உடைந்தது போன்ற ஒரு இமேஜை வெளியிட்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement