விராட், ரோஹித் டி20 கேரியர் முடிகிறதா? 2023 உ.கோ உட்பட பல முக்கிய முடிவுகளை எடுக்க வெ.இ பறக்கும் அஜித் அகர்கர்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் தோல்வியை சந்திப்பதற்கு பெரும்பாலான சீனியர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் உச்சகட்ட விமர்சனங்கள் எழுந்த நிலையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ ஏற்கனவே துவங்கியுள்ளது.

Rohit Kuldeep Yadav Virat Kohli KL Rahul India

- Advertisement -

அதன் காரணமாக டி20 அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற சீனியர்களின் கேரியர் முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் 202 டி20 உலக கோப்பைக்கு பின் நியூசிலாந்து, இலங்கை தொடர்களை தொடர்ந்து அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்களிலும் ஓய்வு என்ற பெயரில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தரவரிசை நம்பர் ஒன் அணியாக இருந்தும் கொஞ்சம் கூட போராடாமல் 209 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்தது.

அகர்கர் மீட்டிங்:
அதனால் டி20 போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் புதிய கேப்டனை அறிவித்து இளம் அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ரசிகர்களிடம் பரவலாக காணப்படுகின்றன. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய அணியுடன் இருந்து வரும் தேர்வுக்குழு உறுப்பினர் சலில் அன்கோலா டெஸ்ட் தொடருடன் நாடு திரும்புவதாகவும் அவருக்கு பதில் புதிதாக பொறுப்பேற்ற தலைவர் அஜித் அகர்கர் விரைவில் அங்கு செல்ல உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

IND

அந்த சந்திப்பில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்களின் டி20 கேரியர் பற்றியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இளம் அணியை உருவாக்குவது பற்றியும் 2023 உலகக் கோப்பையில் விளையாடும் வீரர்கள் பற்றியும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் அவர் விவாதிக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகிறது. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி கூறியது பின்வருமாறு. “தற்போது வெஸ்ட் இண்டீஸில் சலில் அன்கோலா இருக்கிறார். ஆனால் அவர் டெஸ்ட் தொடர் முடிந்ததும் நாடு திரும்ப உள்ளார். அதைத்தொடர்ந்து வெள்ளைப்பந்து தொடர்கள் நடைபெறும் போது அஜித் அகர்கர் அங்கே சென்று அணியுடன் இணைந்து கொள்வார்”

- Advertisement -

“இது டி20 கிரிக்கெட்டில் இது இளம் வீரர்களை கொண்டு வருவதற்கான நேரமாகும். குறிப்பாக 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தேவைப்படுகிறது. அதனால் விராட் மற்றும் ரோஹித் ஆகியோரிடம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துமாறு அஜித் அகர்கர் கேட்டுக்கொள்ள உள்ளார்” என்று கூறினார். மேலும் இந்த பயணத்தில் அவர் இந்திய அணி நிர்வாகத்துடன் விவாதிக்க உள்ள அம்சங்கள் பின்வருமாறு.

Ajit-Agarkar

1. அடுத்த தலைமுறை: டி20 போலவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அடுத்த தலைமுறை உருவாக்குவதற்கான வேலையை துவங்குவது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக புஜாரா, உமேஷ் யாதவ் ஆகியோர் டெஸ்ட் அணியில் கழற்றி விடப்பட்டுள்ள நிலையில் 2023 உலகக் கோப்பையின் முடிவை பொறுத்து ஒருநாள் அணியிலும் சீனியர்களுக்கு பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புளிக்க முடிவு எடுக்கப்பட உள்ளது.

- Advertisement -

2. பும்ரா ஃபிட்னஸ்: 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்திப்பதற்கு பும்ரா இல்லாதது முக்கிய காரணமாக அமைந்தது. எனவே 2023 உலக கோப்பையை கருத்தில் கொண்டு தற்போது குணமடைந்து வரும் அவரை அயர்லாந்து தொடரில் விளையாட வைப்பது பற்றி என்சிஏ ஆலோசனையின் படி முடிவெடுக்கப்பட உள்ளது.

Bumrah 1

அதே போல கேஎல் ராகுல் காயம் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. அவர்கள் குணமடையும் பட்சத்தில் குறைந்தபட்சம் 2023 ஆசிய கோப்பையில் களமிறங்குவதற்கு திட்டமிடப்பட உள்ளது.

இதையும் படிங்க:என்னுடைய பந்துவீச்சில் உள்ள சக்ஸஸிற்கு காரணமே இதுதான். ரகசியத்தை பகிர்ந்த – ரவிச்சந்திரன் அஷ்வின்

3. லக்ஷ்மண் கோச்: மேலும் அயர்லாந்து தொடரில் களமிறங்கும் 2வது தர இந்திய அணிக்கு ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக என்சிஏ இயக்குனர் விவிஎஸ் லக்ஷ்மண் பயிற்சியாளராக செயல்படுவது பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

Advertisement