- Advertisement -
ஐ.பி.எல்

ஸ்ரேயாஸ் மாஸ்.. மயங்கிய நீதா அம்பானி.. ஜெயவர்தனே டார்ச்சரை தாங்க முடியாத பும்ரா.. ரோஹித்திடம் அதிருப்தி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் குவாலிபயர் 2 போட்டியில் மும்பை அணியை தோற்கடித்த பஞ்சாப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 204 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய பஞ்சாப் 19 ஓவரிலேயே இலக்கைத் தொட்டு அபார வெற்றி பெற்று 11 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

மறுபுறம் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 200+ ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை பரிதாபமாக தோற்றது. அதனால் 6வது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மும்பை அணியின் கனவு தகர்ந்தது. முன்னதாக அந்தப் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பாக விளையாடி 87* ரன்கள் அடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் மாஸ் – மயங்கிய அம்பானி:

குறிப்பாக பாண்டியா வீசிய 10வது ஓவரில் அவரும் நேஹல் வதேராவும் சேர்ந்து 1, 6, 1, 4, 1, 4 என மாறிமாறி  அடித்து நொறுக்கினார்கள். அப்போது பவுண்டரி எல்லை அருகில் அமர்ந்திருந்த மும்பை அணியின் உரிமையாளர் நீதா அம்பானி மற்றும் அவருடைய மகன் ஆகாஷ் அம்பானி சோகத்தில் ஆழ்ந்தனர். குறிப்பாக நீதா அம்பானி சோகத்தைத் தாங்க முடியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு இருக்கையில் மயங்கியது போல் சாய்ந்து விட்டார்.

இறுதியில் சிக்ஸருடன் ஸ்ரேயாஸ் ஐயர் போட்டியை ஃபினிஷிங் செய்து மும்பையை தோற்கடித்தார். அப்போது ஆகாஷ் அம்பானி அதிர்ந்து போய் உறைந்துப் போனார். அவர்களுடைய ரியாக்சன் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு புறமிருக்க ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டத்தைப் பார்த்து மும்பை அணியின் பயிற்சியாளர்கள் பதற்றமடைந்தனர்.

- Advertisement -

பும்ரா அதிருப்தி:

அதனால் தலைமைப் பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே பௌண்டரி எல்லைக்கு அருகே நின்று கொண்டிருந்த ஜஸ்ப்ரித் பும்ராவிடம் ஆலோசனை என்ற பெயரில் “அதைச் செய்யுங்கள். இதைச் செய்யுங்கள்” என்று புலம்பித் தள்ளினார். மேலும் பௌண்டரி எல்லையில் இருந்து கொண்டே ஜெயவர்தனே கேப்டன் போல ஃபீல்டிங்கை செட்டிங் செய்தார். அதைப் பார்த்த ஜஸ்ப்ரித் பும்ரா “என்ன இது ஒண்ணுமே புரியல” என்ற வகையில் பும்ரா அருகில் அமர்ந்திருந்த ரோஹித் சர்மாவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியா செய்ஞ்ச அந்த தவறால் தான் தோற்றோம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

இத்தனைக்கும் கடந்தப் போட்டியில் ஜெயவர்தனே ஆலோசனையை கேட்காமலேயே முக்கிய நேரத்தில் விக்கெட்டை எடுத்த பும்ரா மும்பையை வெற்றி பெற வைத்தார். அப்போதும் திருந்தாத ஜெயவர்தனே ஆலோசனைக் கொடுத்து பும்ராவை கடுப்பேற்றினார் என்றே சொல்லலாம். இதைத்தொடர்ந்து இறுதிப் போட்டியில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் கோப்பைக்காக மோத உள்ளன.

- Advertisement -