CSK vs LSG : ஐ.பி.எல் வரலாற்றில் கடந்த 10 வருஷத்துல நிக்கோலஸ் பூரான் ஆடுன இந்த இன்னிங்ஸ் தான் மோசமானது – விவரம் இதோ

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45 வது லீக் போட்டியானது லக்னோ நகரில் நடைபெற்றது. இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே டாஸ் போடுவதற்கு முன்னதாக மழை குறுக்கிட்டதால் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கிடையான இந்த போட்டி துவங்குவதிலேயே தாமதம் ஏற்பட்டது. பின்னர் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

CSK vs LSG

- Advertisement -

அதனைத்தொடர்ந்து முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்ய வந்தது. கடந்த போட்டியில் காயமடைந்த கே.எல் ராகுல் இந்த போட்டியில் விளையாடாததால் லக்னோ அணியின் துவக்க வீரராக மனன் வோரா கைல் மேயர்ஸ்சுடன் களமிறங்கினார். முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்த போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க மிகவும் தடுமாறினர்.

அந்த வகையில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணியானது 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக மீண்டும் போட்டி தடைபட்டது. இந்த போட்டியிலும் லக்னோ அணி 44 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதே வேளையில் அந்த அணிக்கு நம்பிக்கை தரும் விதமாக இளம்வீரர் ஆயுஷ் பதோனி அரைசதம் அடித்து அசத்தினார்.

Pooran

இந்நிலையில் மழையால் போட்டி தடைபட்டு நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் போட்டி முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய லக்னோ அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்ஸ்மேனான நிக்கோலஸ் பூரான் ஐபிஎல் வரலாற்றில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார். அந்த வகையில் இந்த போட்டியில் 31 பந்துகளை சந்தித்த அவர் பவுண்டரி ஏதும் அடிக்காமல் வெறும் 20 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார். அதன்படி அவர் படைத்த மோசமான சாதனை யாதெனில் :

இதையும் படிங்க : CSK vs LSG : மழையால் நின்ற சி.எஸ்.கே லக்னோ போட்டி. இறுதியில் கிடைத்த ரிசல்ட் என்ன தெரியுமா? – விவரம் இதோ

கடந்த 10 ஆண்டுகள் ஐபிஎல் வரலாற்றில் 30 பந்துகளுக்கு மேல் சந்தித்து குறைவான ஸ்ட்ரைக் ரேட் (64.52) உடன் பேட்டிங் செய்த பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார். என்னதான் பேட்டிங்க்கு ஆடுகளம் சாதகமாக இல்லை என்றாலும் அதிரடி ஆட்டக்காரரான அவர் 31 பந்துகளுக்கு 31 ரன்களையாவது அடித்திருக்கலாம் என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement