CSK vs LSG : மழையால் நின்ற சி.எஸ்.கே லக்னோ போட்டி. இறுதியில் கிடைத்த ரிசல்ட் என்ன தெரியுமா? – விவரம் இதோ

Rain
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் போட்டியானது இன்று மதியம் லக்னோ நகரில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. போட்டி துவங்குவதற்கு முன்பாக மைதானத்தில் மழை பெய்ய தொடங்கியதால் மழை காரணமாக டாஸ் போடுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.

CSK vs LSG

- Advertisement -

பின்னர் மழை நின்றதற்கு பிறகு டாஸ் வென்ற சென்னை அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணியில் கேப்டன் மற்றும் துவக்க வீரரான கே.எல் ராகுல் காயம் காரணமாக விளையாடவில்லை என்பதனால் அவருக்கு பதிலாக டாப் ஆர்டரில் மனன் வோரா துவக்க வீரராக கைல் மேயர்ஸ்சுடன் களமிறங்கினார்.

இந்த போட்டியில் சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் துவக்கத்தில் இருந்தே விக்கெட்டை பறிகொடுத்து வந்த லக்னோ அணியின் டாப் ஆர்டர் மிகப்பெரிய சர்வை சந்தித்தது. குறிப்பாக 44 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Badoni

இருந்தாலும் பின் வரிசையில் கைகோர்த்த அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரான் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வேளையில் பூரான் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் கிருஷ்ணப்பா கௌதமும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இருப்பினும் இந்த போட்டியில் மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை விளையாடிய இளம்வீரர் ஆயுஷ் பதோனி 33 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 59 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்திருந்த வேளையில் மழை மீண்டும் போட்டியில் குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இதையும் படிங்க : வீடியோ : அதிர்ந்த ஸ்டோய்னிஸ், சுழலில் மயஜாலம் நிகழ்த்திய ஜடேஜா – அதிரடியாக காப்பாற்றிய படோனி

வெகு நேரம் ஆகியும் மழை நிற்காதால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதோடு மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதால் இந்த போட்டியில் வெற்றி தோல்வியின்றி இரு அணிகளுக்கும் தரா ஒரு புள்ளி வழங்கப்பட்டதாக ரிசல்ட் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement