- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த தொடருக்கு சமமாக இந்தியாவால்.. ஆஸ்திரேலியாவுக்கு 6 மடங்கு லாபம் கிடைச்சுருக்கு.. நிக் ஹாக்லி மகிழ்ச்சி

இந்திய அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா விளையாட உள்ளது. சவாலான ஆஸ்திரேலியாவில் காலம் காலமாக இந்தியா தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தது. இருப்பினும் அதை விராட் கோலி தலைமையில் மாற்றிய இந்தியா 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றது.

அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா வரலாறு படைத்தது. அதைத்தொடர்ந்து 2020/21 தொடரின் முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டான இந்தியா படுதோல்வியை சந்தித்தது. ஆனால் அங்கிருந்து ரகானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியா நடராஜன் போன்ற இளம் வீரர்களை வைத்து காபா கோட்டையை உடைத்து 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

- Advertisement -

6 மடங்கு வருமானம்:
அதனால் 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் தொடருக்கு சமமாக தங்கள் நாட்டில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை ரசிகர்களை ஈர்ப்பதாக ஆஸ்திரேலிய வாரிய இயக்குனர் நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.

அதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரால் தங்களுக்கு 6 மடங்கு வருமானம் அதிகரித்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியதற்கு வருமாறு. “ஆஸ்திரேலிய கிரிக்கெட் காலண்டரில் பார்டர் கவாஸ்கர் கோப்பை மற்றும் ஆஷஸ் மிகப் பெரிய தொடர்களாகும். அது பெரும்பாலும் வணிக ரீதியில் ஒப்பிடத்தக்கவை”

- Advertisement -

“அந்தத் தொடருக்கு அற்புதமான ரசிகர்களின் கூட்டம் மற்றும் ஒளிபரப்பு பார்வையாளர்கள் கிடைக்கின்றனர். 2018/19 தொடரை விட தற்போதைய தொடருக்கு இந்தியாவிலிருந்து 6 மடங்கு டிக்கெட் விற்பனை அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒவ்வொரு புகழ்பெற்ற மைதானங்களில் தனித்துவமான பிட்ச் மற்றும் சூழ்நிலைகள் இருக்கும்”

இதையும் படிங்க: இலங்கை அணிக்கெதிரான தோல்விக்கு விராட் கோலி மட்டும் காரணம் இல்ல – தினேஷ் கார்த்திக் கொடுத்த விளக்கம்

“அதுவே அந்தத் தொடரை மிகவும் ஆர்வம் மிகுந்ததாக மாற்றுகிறது. அதில் ரசிகர்களை மேலும் ஈர்ப்பதற்காக பகல் இரவு டெஸ்ட் போட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்” என்று கூறியுள்ளார். அப்படி வருமானம் அதிகமாக கிடைப்பதாலேயே இம்முறை 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் என்று ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது. அந்தத் தொடர் வரும் நவம்பர் 22ஆம் தேதி பெர்த் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -