இலங்கை அணிக்கெதிரான தோல்விக்கு விராட் கோலி மட்டும் காரணம் இல்ல – தினேஷ் கார்த்திக் கொடுத்த விளக்கம்

DK
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது (0-2) என்ற கணக்கில் இழந்தது. கடந்த 1997-ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது 27 ஆண்டுகள் கழித்து இந்திய அணி இலங்கை அணியிடம் ஒருநாள் தொடரை இழந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்களில் மோசமான ஆட்டமும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் எந்த ஒரு போட்டியிலுமே இலக்கு 250-யை தாண்டவில்லை என்றாலும் அதற்குள்ளாகவே இந்திய அணி ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி பெற்ற இந்த தோல்வி ஏமாற்றத்தை அளித்து இருப்பது உண்மைதான். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய வீரர்களின் தடுமாற்றமான ஆட்டம் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் விராட் கோலி மீது எந்த தவறும் இல்லை என தினேஷ் கார்த்திக் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த தொடரை பொறுத்தவரை நாம் தோல்வி அடைந்தோம் என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் விராட் கோலி மற்ற யாரோ இருந்தாலும் சரி பந்து பழையதாக இருக்கும் போது 8 முதல் 30 ஓவர்கள் வரை மிடில் ஓவர்களில் பேட்டிங் செய்வது மிக மிக கடினம்.

- Advertisement -

இதனால் அவர் சிறப்பாக விளையாடவில்லை என்று எதுவும் கிடையாது. இதுபோன்ற மைதானங்களில் விளையாடுவது உண்மையிலேயே கடினம் தான். நான் கோலிக்கு ஆதரவாக பேசவில்லை. இது போன்ற மைதானங்களில் விளையாடுவது கடினம் தான் என்று கூறுகிறேன். எனவே தோல்விக்கு விராட் கோலி மட்டும் காரணம் கிடையாது. சூழ்நிலைகளும் தான் காரணம்.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு சப்போர்ட் பண்ணல.. ஆனா தோல்வியால் இந்தியா கவலைப்பட வேண்டியதில்ல.. டிகே சொல்லும் காரணம்

விராட் கோலி அவுட்டான விதத்தை பார்த்தாலே உங்களுக்கு விஷயம் நன்றாக தெரியும். சிறப்பாக ஆடக்கூடிய அவரே பந்தை கணிக்க தவறி எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டம் இழந்தார். மைதானத்தின் முழு சாதகத்தாலே அவர் ஆட்டம் இழக்க நேர்ந்தது என்று கோலிக்கு ஆதரவாக தினேஷ் கார்த்திக் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement