அடுத்தடுத்த போட்டிகள் ஒரு பக்கம். ரூல்ஸ் ஒருபக்கம். தொடர் தோல்விக்கு பிறகு – நிக்கோலஸ் பூரான் வருத்தம்

Nicolas-Pooran
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது சொந்த நாட்டில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியை எதிர்த்து விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய அணியிடம் தோல்வி அடைந்த அவர்கள் மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் தொடரை இழந்து பரிதாப நிலையில் உள்ளனர். முதல் இரண்டு போட்டிகளில் நல்ல போராட்டத்தை அளித்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது நேற்றைய மூன்றாவது ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியாவது பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்றைய போட்டியிலும் 119 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

IND vs WI Shikhar Dhawan Nicholas Pooran

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி 36 ஓவர் மட்டுமே நடைபெற்றது. அதன்படி இந்திய அணி அந்த 36 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 26 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்ததால் இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படி இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்ததன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் வெளிப்படையான பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த தொடரில் நாங்கள் அடைந்த தோல்வி என்பது எங்களுக்கு கடினமாக ஒன்றுதான். முதல் இரண்டு போட்டிகளிலும் நாங்கள் நிறைய விடயங்களை சரியாக செய்தோம்.

IND vs WI

அதேபோன்று இந்த போட்டியிலும் நாங்கள் எங்களுடைய பெஸ்ட் தர முயற்சி செய்தோம். எங்களுடைய வீரர்கள் அனைவரும் நன்றாகவே விளையாடினார்கள். ஆனாலும் குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்த போட்டியில் விளையாடுவது என்பது ஒரு பேட்டிங் குரூப்பாக எங்களுக்கு கடினமாக இருந்தது.

- Advertisement -

அதோடு மட்டுமின்றி நேற்று மழையின் காரணமாக டக் வொர்த் லூயிஸ் விதிமுறையும் பயன்படுத்தப்பட்டதால் அதுவும் சற்று சவாலை ஏற்படுத்தியது. எங்கள் அணியில் உள்ள வீரர்கள் தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் சரியான திசையை நோக்கி விளையாட பயணித்து வருகிறார்கள். எதிர்வரும் நியூசிலாந்து தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன் என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs WI : எனக்கு இந்த விஷயத்தை நெனச்சா பெருமையா இருக்கு – தொடர் வெற்றிக்கு பின்னர் தவான் பேட்டி

மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : பந்துவீச்சாளர்கள் நன்றாகவே பந்து வீசினார்கள். ஆனாலும் அவர்களால் விக்கெட்டை கைப்பற்ற முடியவில்லை. ஆனால் அது ஒரு பெரிய விடயம் கிடையாது. நம்பிக்கையுடன் நாங்கள் அடுத்த தொடரை எதிர்கொள்ள காத்திருக்கிறோம் என நிக்கோலஸ் பூரான் தனது வருத்தத்தை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement