- Advertisement -
இந்திய கிரிக்கெட்

10.75 கோடி கொடுத்து வாங்குனது தப்பே இல்ல. இந்திய அணிக்கு எதிராக சாதனை படைத்த பூரான் – விவரம் இதோ

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி20 போட்டியானது நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 65 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 35 ரன்களும் குவித்தனர்.

அதனைத் தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 17 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்து இந்த தொடரை முழுவதுமாக இந்திய அணியின் வசம் இழந்தது. இந்த தோல்வியின் மூலம் ஒருநாள் தொடரை தொடர்ந்து டி20 தொடரையும் இந்திய அணியிடம் அவர்கள் இழந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்திருந்தாலும் அந்த அணியின் துணை கேப்டனும், முன்னணி இளம் அதிரடி ஆட்டக்காரரான நிக்கலஸ் பூரன் இந்திய அணிக்கு எதிராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த தொடர் முழுவதுமே வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்திய அணிக்கு எதிராக பேட்டிங் செய்ய திணறி வந்தாலும் 3 டி20 போட்டிகளில் தனது அசத்தலான ஆட்டத்தை நிக்கலஸ் பூரன் வெளிப்படுத்தியுள்ளார்.

மூன்றாவது வரிசையில் களமிறங்கி இந்த தொடரின் மூன்று போட்டிகளிலுமே அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். மேலும் இந்திய அணிக்கு எதிராக டி20 போட்டியில் தொடர்ந்து மூன்று அரை சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையை வைத்திருக்கும் நியூசிலாந்து வீரர் பிரெண்டன் மெக்கல்லம் சாதனையுடன் தற்போது நிக்கோலஸ் பூரானும் இணைந்துள்ளார்.

- Advertisement -

எதிர்வரும் ஐபிஎல் தொடருக்காக அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 88 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்த ஆண்டுக்கான தொகை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பெரிய தொகைக்கு அவரை போட்டிபோட்டு சன்ரைசர்ஸ் ஏலத்தில் எடுத்தது.

இதையும் படிங்க : அந்த சி.எஸ்.கே வீரரை வாங்க நாங்க ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஸ்கெட்ச் போட்டுட்டோம் – ஆர்.சி.பி தகவல்

இன்னும் ஒரு மாத இடைவெளியில் ஐபிஎல் தொடங்க விருக்கும் வேளையில் இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக அவர் பிரமாதமான பார்மை வெளிப்படுத்தி உள்ளதால் நிச்சயம் அது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு திருப்தியான ஒன்றாக அமையும் என்பதனால் தற்போது சன்ரைசர்ஸ் அணி அவரின் இந்த சாதனையால் மகிழ்ச்சியில் இருக்கும் என்று நம்பலாம். மேலும் அதிரடி ஆட்டக்காரரான இவர் எந்த நேரத்திலும் போட்டியில் நிலைமையை அப்படியே மாற்றும் திறன் உடையவர் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

- Advertisement -
Published by