அந்த சி.எஸ்.கே வீரரை வாங்க நாங்க ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஸ்கெட்ச் போட்டுட்டோம் – ஆர்.சி.பி தகவல்

RCB
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளை சேர்த்து 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த 2 அணிகள் உதயமானதால் அந்த அணிக்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வண்ணம் கடந்த 2018க்கு பின் இந்த வருடம் மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. பெங்களூருவில் கடந்த பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்ற போதிலும் இறுதியாக 204 வீரர்கள் மட்டுமே 551 கோடி செலவில் வாங்கப்பட்டார்கள்.

Charu-Sharma

- Advertisement -

வழக்கம் போலவே மிகவும் பரபரப்பும் விறுவிறுப்பும் மத்தியில் நடந்த இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக இளம் இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிசான் 15.25 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி சாதனை படைத்துள்ளார்.

கைமாறிய பப் டு பிளேஸிஸ்:
அதேபோல தீபக் சஹர், ஷ்ரேயஸ் ஐயர், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் வார்னர் போன்ற இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார்கள். அதே சமயம் ஆஸ்திரேலியாவிற்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஒரு சில நட்சத்திர வீரர்களை வாங்குவதற்கு எந்த அணியும் ஆர்வம் காட்டாதது ஆச்சரியத்தை அளித்தது.

Raina

அதை விட இந்த தொடரில் காலம் காலமாக அபாரமாக விளையாடி மிஸ்டர் ஐபிஎல் என பெயர் பெற்ற இந்தியாவின் சுரேஷ் ரெய்னாவை சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட எந்த அணியும் வாங்காதது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அவரை வாங்காத காரணத்தால் சென்னை அணி நிர்வாகம் மீது ரசிகர்கள் கடுப்பாக இருந்த நிலையில் அந்த அணிக்காக நீண்ட நாட்களாக விளையாடி வந்த தென்ஆப்பிரிக்காவின் பப் டு பிளேஸிஸையும் அந்த அணி வாங்காதது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அவ்வளவு திறமை வாய்ந்த அவரை சென்னை கோட்டை விட்ட நிலையில் 7 கோடி கொடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் வெற்றிகரமாக வாங்கியது.

- Advertisement -

முன்கூட்டியே ஸ்கெட்ச்:
சென்னை அணிக்காக கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து விளையாடி வந்த டு பிளசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு முதுகெலும்பாக கருதப்பட்டார். டாப் ஆர்டரில் அதிரடியாக ரன்களை குவித்த அவர் 35 வயதை கடந்த போதிலும் ஃபீல்டிங் செய்யும்போது பவுண்டரி எல்லைகளில் எத்தனையோ மிரட்டலான கேட்ச்களை பிடித்து சென்னையின் பல வெற்றிகளின் பங்காற்றியுள்ளார். இதனால் இவரை எப்படியாவது தங்கள் அணிக்கு விளையாட வைக்க பெங்களூர் அணி நிர்வாகம் கடந்த ஒரு மாதமாகவே ஸ்கெட்ச் போட்டது தற்போது தெரியவந்துள்ளது.

Faf

அதாவது ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் எந்த தரமான வீரர்களை வாங்கலாம் என்பது பற்றி பெங்களூரு அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் திட்டமிட்ட வீடியோவை அந்த அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “நம்மிடம் தற்போது இருக்கும் அணியை மேலும் வலுப்படுத்துவதற்கு பப் டு பிளேஸிசை வாங்கினால் அது மிகப்பெரிய பலனளிக்கும். ஏனெனில் அதிக அனுபவம் நிறைந்துள்ள அவர் தென் ஆப்பிரிக்காவுக்குக்காக கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கொண்டுள்ளார். மேலும் பல ஐபிஎல் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். அவர் மிகவும் மரியாதைக்குரிய அதே சமயம் கடினமாக போராடும் குணத்தை பெற்றவர்” என கூறியுள்ளார்.

- Advertisement -

செம பிளான்:
இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அவரை மீண்டும் வாங்குவதற்காக சென்னை அணி கண்டிப்பாக முயற்சிக்கும். எனவே அவரை வாங்க கடும் போட்டி நிலவும் என்பதால் அவருக்காக தனி பட்ஜெட் ஒதுக்க வேண்டும். சென்னை அணியுடன் அவரை வாங்குவதற்காக மற்ற எந்த அணி போட்டி போடும் என தெரியாது என்றாலும் அவரை வாங்க யாரும் எதிர்பாராத வண்ணம் நாம் போட்டி போட வேண்டும். குறிப்பாக முதல் நாளில் டு பிளேஸிஸ் மற்றும் ஹஸரங்கா ஆகிய வெளிநாட்டு வீரர்களை எப்படியாவது வாங்கவேண்டும்” என கூறியுள்ளார்.

RCB

அதாவது பப் டு பிளேஸிசை வாங்க சென்னை உட்பட எந்த அணி போட்டி போட்டாலும் அவர்கள் யாரையும் வாங்க விடாமல் இறுதிவரை தங்கள் அணிக்கு வாங்க ஏலத்துக்கு முன்பாகவே பெங்களூரு அணி நிர்வாகம் முதல் முடிவாக எடுத்துள்ளது. அதற்காக எத்தனை கோடிகள் செலவானாலும் பரவாயில்லை என நினைத்த அந்த அணி நிர்வாகம் அவருக்கென்று தனியாக ஒரு பெரிய ஏலத்தொகையை ஒதுக்கியதும் தெரிய வருகிறது. கடந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக பேட்டிங் செய்த அவர் 633 ரன்கள் குவித்து 4வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க : இதையெல்லாம் பாத்துட்டு சும்மாவா இருக்கீங்க. சஹாவுக்காக குரல் கொடுத்த முன்னாள் வீரர்கள் – என்ன நடந்தது?

அத்துடன் தங்களுக்கான கேப்டன் இல்லாத நிலையில் ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவுக்கு கேப்டன்ஷிப் செய்த அனுபவமும் பெற்றுள்ள காரணத்தாலேயே அவரை வாங்குவதற்கு பெங்களூர் அணி நிர்வாகம் இந்த அளவுக்கு முயற்சித்து இறுதியில் வெற்றியும் கண்டது தெரியவருகிறது. சொல்லப்போனால் ஐபிஎல் 2022 தொடருக்கான பெங்களூர் அணியின் கேப்டனாக டுப்லஸ்ஸிஸ் நியமிக்கப்படுவார் என்ற ஒரு செய்தியும் காற்றில் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement