இதையெல்லாம் பாத்துட்டு சும்மாவா இருக்கீங்க. சஹாவுக்காக குரல் கொடுத்த முன்னாள் வீரர்கள் – என்ன நடந்தது?

Saha-1
- Advertisement -

இலங்கைக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்குபெரும் 3 டி20 மற்றும் 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 2வதாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக அனுபவ வீரர் ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொகாலி மற்றும் பெங்களூரு ஆகிய நகரில் டெஸ்ட் தொடரானது நடைபெறவுள்ளது.

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து நட்சத்திர அனுபவ வீரர்கள் செட்டேஸ்வர் புஜரா மற்றும் அஜிங்க்ய ரஹானே ஆகியோர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வரும் இவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வருவதால் அவர்களை இந்திய தேர்வு குழுவினர் அதிரடியான நீக்கியுள்ளார்கள்.

சஹாவுக்கு இடமில்லை:
அவர்களை போலவே சமீப காலங்களாக பெரிய அளவில் சோபிக்க தவறிய அனுபவ விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோரையும் இந்த இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து தேர்வு குழுவினர் நீக்கியுள்ளார்கள். ஏற்கனவே பாரம் இல்லாமல் தவித்து வரும் இவர்கள் 35 வயதை கடந்து விட்டதால் இந்தியாவின் எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்கும் வண்ணம் இனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வளர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Pujara

குறிப்பாக இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் ஒரு முக்கியமான நிரந்தர இடத்தைப் பிடித்து விட்ட காரணத்தால் அனுபவம் நிறைந்த சஹா கழட்டி விடப்பட்டுள்ளார். ஒருவேளை அவருக்கு காயம் ஏற்பட்டால் கூட சஹாவுக்கு பதில் மற்றொரு இளம் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்துக்கு வாய்ப்பளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

- Advertisement -

மர்ம நபரின் மிரட்டல்:
இந்நிலையில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதை பற்றி பேட்டி எடுக்க ஒரு பத்திரிகையாளர் சஹாவை நாடியுள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்காத காரணத்தால் கோபமடைந்த அந்த பத்திரிக்கையாளர் அவரை மிரட்டியுள்ளது இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனாலும் அதற்கு பயப்படாத சகா அந்த பத்திரிக்கையாளர் மிரட்டிய செய்திகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டுள்ளார்.

saha

இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியது பின்வருமாறு. “இந்திய கிரிக்கெட்டுக்கு இத்தனை நாட்களாக நான் ஆற்றிய பங்கிற்காக இறுதியில் ஒரு மரியாதைக்குரிய பத்திரிகையாளரிடம் இருந்து இதைத்தான் நான் பெற்றுள்ளேன். இன்றைய பத்திரிகை துறை இப்படி தான் செல்கிறது” என மனவேதனையில் பதிவிட்டுள்ளார். இத்துடன் அந்த பத்திரிக்கையாளர் மிரட்டிய செய்தியையும் அவர் புகைப்படமாக பதிவேற்றியுள்ளார். அந்த புகைப்படத்தில் இருப்பது பின்வருமாறு.

- Advertisement -

“என்னுடன் நீங்கள் ஒரு பேட்டி செய்தால் நன்றாக இருக்கும். நீங்கள் ஜனநாயக முறைப்படி நடந்து கொள்ள விரும்பினால் நான் தள்ள மாட்டேன். கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளங்க கூடிய ஒரு விக்கெட் கீப்பர் மட்டுமே தேர்வு செய்வார்கள். ஆனால் நீ 11 பத்திரிகையாளர்களில் சிறந்தவரை தேர்வு செய்வது என்னைப் பொருத்தவரை சரியானதல்ல. யார் உனக்கு அதிக உதவி செய்வார்களோ அவர்களை தேர்வு செய்” என அந்த பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.

சஹாவுக்கு மிரட்டல்:
அதை தொடர்ந்து அந்த பத்திரிக்கையாளர் சகாவுக்கு நேரடியாக போன் செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் அவர் அதை எடுக்காத காரணத்தால் கோபமடைந்த அந்த பத்திரிக்கையாளர் மேலும் கூறியது பின்வருமாறு. “எனது அழைப்பை ஏற்கவில்லை. இனிமேல் உன்னை எப்போதுமே நான் பேட்டி எடுக்க மாட்டேன். இந்த அவமானத்தை எப்போதும் மறக்கவும் மாட்டேன். இது போன்ற செயலை என்னிடம் நீ செய்திருக்கக் கூடாது” என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

- Advertisement -

தமக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டலை பற்றி சற்றும் அஞ்சாத ரித்திமான் சாஹா அந்த பத்திரிகையாளரின் பெயரை குறிப்பிடாமல் உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளார். இதை பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் அதிர்ந்து போயுள்ளார்கள் என்றே கூறலாம். ஏனெனில் இந்தியாவுக்காக விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரரை ஒரு சாதாரண பத்திரிக்கையாளர் மிரட்டுகிறார் என்றால் இன்றைய பத்திரிகை துறை எந்த அளவுக்கு மோசமாக மாறி விட்டது என பலரும் அஞ்சுகிறார்கள்.

இதையும் படிங்க : வெஸ்ட்இண்டீஸ் தொடரில் முக்கிய இந்திய வீரருக்கு காயம் – குணமடைய 6 வாரங்கள் ஆகுமாம் (அடப்பாவமே)

மேலும் ஒரு இந்திய கிரிக்கெட் வீரரை ஒரு பத்திரிக்கையாளர் இப்படி மிரட்டியுள்ளதை பார்த்த பல இந்திய வீரர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார்கள். குறிப்பாக வீரேந்திர சேவாக், இர்பான் பதான், ஆர்பி சிங் என பல முன்னாள் இந்திய வீரர்கள் அந்த பத்திரிகையாளரின் பெயரை வெளியிடுமாறு சகாவிடம் கேட்டார்கள். அதேபோல் ஒரு கிரிக்கெட் வீரருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்படும் அளவுக்கு பிசிசிஐ என்ன செய்கிறது, இதுபற்றி பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி விரைவில கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement