ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச லீக் 2025/26 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் டிசம்பர் 9ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்ற 9வது போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் டெசர்ட் வைபர்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் முதலில் விளையாடிய வைஃபர்ஸ் அணி 20 ஓவரில் 159/4 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக ஃபக்கார் ஜாமான் 35, மேக்ஸ் ஹோல்டன் 42, ஆண்ட்ரீஸ் கவுஸ் 21 ரன்கள் எடுத்தார்கள். எமிரேட்ஸ் அணிக்கு அதிகபட்சமாக அல்லாஹ் கன்சன்பர் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய எம்ஐ எமிரேட்ஸ் அணி முடிந்தளவு போராடியும் 20 ஓவரில் 158/9 ரன்கள் மட்டுமே எடுத்து வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
பூரானின் செயல்:
அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 31, டாம் பாண்டன் 34, கேப்டன் பொல்லார்ட் 23, முகமது வாசிம் 24 ரன்கள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. அதனால் த்ரில் வெற்றி பெற்ற வைஃபர்ஸ் அணிக்கு அதிகபட்சமாக டேவிட் பைன் 4 சாய்த்தார்கள். முன்னதாக அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வைபர்ஸ் அணிக்கு மேக்ஸ் ஹோல்டன் விளையாடும் போது ரசித் கான் 16வது ஓவரை வீசினார்.
அந்த ஓவரின் கடைசி பந்தை ரசித் கான் ஒய்டு போல வீச முயற்சித்தார். அதை கோல்டன் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறி இறங்கி சென்று அடிக்க முயற்சித்த போதிலும் பந்தை முழுமையாக தவற விட்டார். அப்பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரான் எளிதாக ஸ்டம்பிங் செய்வதற்கு போதுமான நேரம் இருந்தது.
ரசிகர்கள் விமர்சனம்:
ஆனால் அப்போது நிக்கோலஸ் பூரான் ஸ்டம்பிங் செய்வதற்கு முயற்சி கூட செய்யவில்லை. அதைப் பயன்படுத்திய ஹோல்டன் மீண்டும் வெள்ளைக் கோட்டுக்குள் வந்து தன்னுடைய விக்கெட்டை காப்பாற்றினார். அதைப் பார்த்த ரசிகர்கள் நிக்கோலஸ் பூரான் வேண்டுமென்ற இப்படி செய்ததாக விமர்சனம் செய்கிறார்கள். ஏனெனில் அதே ஓவரின் 4வது பந்தில் ஹோல்டனுக்கு எதிராக எம்ஐ எமிரேட்ஸ் அணி அவுட் கேட்டு டிஆர்எஸ் எடுத்தார்கள்.
இதையும் படிங்க: 100 ஆவது டி20 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் முதல் இந்திய பவுலராக ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்திய – அசத்தல் சாதனை
அப்படிப்பட்ட நிலையில் 6வது பந்தில் ஸ்டம்பிங் வாய்ப்பு கிடைத்தும் செய்யாதது ஏன்? என்று பூரான் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியை ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். மறுபுறம் ஸ்டம்பிங்கில் தப்பிய ஹோல்டன் 113 ஸ்ட்ரைக் ரேட்டில் தடுமாற்றமாக விளையாடியதால் 16வது ஓவர் முடிந்ததும் ரிட்டையர்ட் அவுட்டாகி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.



