100 ஆவது டி20 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் முதல் இந்திய பவுலராக ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்திய – அசத்தல் சாதனை

Bumrah
- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்று கட்டாக் நகரில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

முதல் இந்திய பந்துவீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்திய சாதனை :

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக மீண்டும் கம்பேக் கொடுத்திருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா 3 ஓவர்கள் பந்துவீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் எடுத்த இந்த 2 விக்கெட்களின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டாவது இந்திய வீரராக பும்ரா மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்க வீரர் டேவால்டு பிரேவிஸ் விக்கெட்டை வீழ்த்தும் போது அவர் சர்வதேச டி20 போட்டிகளில் தனது நூறாவது விக்கெட்டை பதிவு செய்தார். இதன் மூலம் அர்ஷ்தீப் சிங்குக்கு அடுத்து இரண்டாவது இந்திய பவுலராக சர்வதேச டி20 போட்டியில் 100 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

அதுமட்டும் இன்றி மேலும் ஒரு முக்கிய சாதனையை முதல் இந்திய பந்துவீச்சாளராக நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 234 விக்கெட்டுகளையும், 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இவ்வேளையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி முடிந்த கையோடு 81 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 101 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இப்படி மூன்று வகையான போட்டிகளிலும் 100-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : முதல் டி20 போட்டியில் இந்தியாவிடம் நாங்க தோக்க இதுவே காரணம் – எய்டன் மார்க்ரம் வருத்தம்

உலகளவில் இந்த சாதனையை இவருக்கு முன்னதாக 4 வீரர்கள் மட்டுமே நிகழ்த்தியுள்ளனர். லாசித் மலிங்கா, ஷாகிப் அல் ஹசன், டிம் சவுதி, ஷாகின் அப்ரிடி ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்த வேளையில் தற்போது ஐந்தாவது சர்வதேச பவுலராக ஜஸ்ப்ரீத் பும்ராவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement