வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2024 கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் செப்டம்பர் 28ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு ட்ரினிடாட் நகரில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய 28வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற பார்படாஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ட்ரின்பாகோ அணி 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 175-7 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 27, கேசி கார்ட்டி 32, கேப்டன் கைரன் பொல்லார்ட் 42, ஆண்ட்ரே ரசல் 31 ரன்கள் எடுத்தனர். பார்படாஸ் அணிக்கு அதிகபட்சமாக மஹீஸ் தீக்சனா 3, நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அசத்தும் நிக்கோலஸ் பூரான்:
அதன் பின் 176 ரன்களை துரத்திய பார்படாஸ் அணி முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவர்களில் 145-9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு டீ காக் 8, கேப்டன் ரோவ்மன் போவல் 18, ஜேசன் ஹோல்டர் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். டேவிட் மில்லர் 30, அலிக் அதனேஷ் 44 ரன்கள் எடுத்தும் ஃபினிஷிங் செய்ய தவறினார்கள்.
அதனால் 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ட்ரின்பாகோ அணிக்கு அதிகபட்சமாக ஆக்கில் ஹாசன், கிறிஸ் ஜோர்டான் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். முன்னதாக இப்போட்டியையும் சேர்த்து 2024ஆம் ஆண்டு விளையாடிய டி20 கிரிக்கெட்டில் நிக்கோலஸ் பூரான் 66 போட்டிகளில் 2059 ரன்களை 42.0 சராசரியில் 160 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ளார்.
இரட்டை உலக சாதனை:
அதாவது சர்வதேசம், ஐபிஎல், தற்போதைய சிபிஎல் உட்பட 2024ஆம் ஆண்டு விளையாடிய டி20 கிரிக்கெட்டில் பூரான் 2059* ரன்களை குவித்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் சாதனையை உடைத்துள்ள பூரான் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2021 காலண்டர் வருடத்தில் முகமது ரிஸ்வான் 2036 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
இதையும் படிங்க: அதெல்லாம் வதந்தி.. ஹர்டிக் பாண்டியா இந்தியாவுக்காக இதை செய்ய மாட்டாரு.. பார்திவ் படேல் பேட்டி
இது போக இந்த வருடம் நடைபெற்ற டி20 போட்டிகளில் மட்டும் அவர் 150 சிக்ஸர்களை கடந்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 150 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் நிக்கோலஸ் பூரான் படைத்துள்ளார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 2015 காலண்டர் வருடத்தில் கிறிஸ் கெயில் 135