அதெல்லாம் வதந்தி.. ஹர்டிக் பாண்டியா இந்தியாவுக்காக இதை செய்ய மாட்டாரு.. பார்திவ் படேல் பேட்டி

Parthiv Patel
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா 2016 முதல் சர்வதேச அரங்கில் விளையாடி வருகிறார். ஆரம்ப காலங்களிலேயே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 2018 நாட்டிங்கம் போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதனால் கபில் தேவ் போல வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டதாக இந்திய ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

ஆனால் 2018 ஆசியக் கோப்பையில் படுகாயத்தை சந்தித்த பாண்டியா மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தார். அதனால் ஏற்பட்ட தாக்கத்தில் 2023 உலகக் கோப்பை வரை அவ்வப்போது காயங்களை சந்தித்து வரும் பாண்டியா முழுமையாக பந்து வீசத் தடுமாறி வருகிறார். அதனால் தம்முடைய உடல் ஒத்துழைக்காது என்று முடிவெடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை முழுவதுமாக புறக்கணித்துள்ளார்.

- Advertisement -

வதந்தியான பயிற்சி:

சொல்லப்போனால் 2024 டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக விளையாடிய அவர் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதனால் ஓய்வு பெற்ற ரோஹித்துக்கு பின் ஹர்திக் பாண்டியா புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுமாரான ஃபிட்னஸ் காரணமாக பாண்டியாவை கழற்றி விட்ட பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புதிய கேப்டனாக சூரியகுமாரை தேர்ந்தெடுத்தார்.

இதற்கிடையே சில வாரத்திற்கு முன் ஹர்திக் பாண்டியா சிவப்பு நிற பந்தில் பந்து வீசி பயிற்சிகளை எடுக்கும் வீடியோக்கள் வைரலானது. குறிப்பாக நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பதற்காகவே பாண்டியா சிவப்பு நிற பந்தில் பயிற்சி எடுப்பதாக செய்திகள் வெளியாகின.

- Advertisement -

பார்திவ் படேல் விளக்கம்:

இந்நிலையில் கைவசம் வெள்ளைப்பந்து இல்லாததாலேயே பாண்டியா சிவப்பு நிற பந்தில் பயிற்சி எடுத்ததாக முன்னாள் வீரர் பார்திவ் பட்டியல் தெரிவித்துள்ளார். எனவே அந்த செய்திகள் வதந்தி என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை நான் பார்க்கவில்லை”

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் போல முஷீர் கானுக்கு நேர்ந்த சோகம்.. இராணி கோப்பையில் விலகல்? ரசிகர்கள் பிராத்தனை

“வெள்ளைப் பந்து கைவசம் இல்லாததாலேயே அவர் சிவப்பு நிற பந்தில் பயிற்சி எடுத்தார். அவருடைய உடல் தொடர்ந்து 4 – 5 நாட்கள் விளையாட அனுமதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்க விரும்பினால் அவர் ஒரு உள்ளூர் போட்டியிலாவது விளையாட வேண்டும். ஆனால் அதை அவர் செய்வதாக தெரியவில்லை” என்று கூறினார்.

Advertisement