கோலி இல்லாமலேயே சாதித்த இந்தியா.. முதல் முறையாக இரட்டை அடி வாங்கிய பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து

Ben Stokes 6
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல பேட்டிங் செய்யும் யுக்தியை கடைப்பிடிக்கும் இங்கிலாந்து அணி நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் போன்ற அணிகளை வரிசையாக தோற்கடித்தது.

எனவே பஸ்பால் என்றழைக்கப்படும் அதிரடி யுக்தியை பயன்படுத்தி இத்தொடரில் இந்தியாவை 12 வருடங்கள் கழித்து அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று இங்கிலாந்து அணியினர் ஆரம்பத்திலேயே எச்சரித்தனர். அதற்கேற்றார் போல் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலையும் பெற்றது.

- Advertisement -

இரட்டை அடி:
அதனால் சொன்னதை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியை இரண்டாவது போட்டியில் 106 வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா மூன்றாவது போட்டியில் ஒரு படி மேலே சென்று 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால் அப்போதும் பஸ்பால் அணுகு முறையை பின்பற்றி 4வது போட்டியில் வென்று 3 – 2 என்ற கணக்கில் இத்தொடரை வெல்வோம் என பென் ஸ்டோக்ஸ் உறுதியாக தெரிவித்திருந்தார்.

அந்த நிலையில் ராஞ்சியில் நடந்த 4வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் குவித்து பின்னர் இந்தியாவை 307 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. இருப்பினும் 3வது நாளில் தீயாக செயல்பட்ட இந்தியா 145 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டி பின்னர் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 3 – 1* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ள இந்தியா கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

குறிப்பாக பேட்டிங் துறையின் முதுகெலும்பான விராட் கோலி முழுமையாக இல்லாத இந்திய அணியில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறினர். மேலும் 3வது போட்டியில் பாதியிலேயே அஸ்வின் அவசரமாக வெளியேறிய நிலையில் 4வது போட்டியில் பவுலிங் துறையின் முதுகெலுப்பான பும்ரா ஓய்வெடுத்தார். இருப்பினும் அப்படி முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களை வைத்து இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா தொடர்ந்து 17வது முறையாக சொந்த மண்ணில் இரு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: எல்லாரும் அசத்துனாங்க.. ஆனா அவர் மட்டும் இல்லனா மேட்ச் கைவிட்டு போயிருக்கும்.. சச்சின் பாராட்டு

மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக 3 தொடர்ச்சியான போட்டிகளில் தோற்ற இங்கிலாந்து ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்துள்ளது. அத்துடன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இதற்கு முன் விளையாடிய 7 தொடர்களில் 4 வெற்றி 3 ட்ராவை சந்தித்த இங்கிலாந்து முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை பதிவு செய்து தலைகுனிந்துள்ளது.

Advertisement