
ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அங்கே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி புலவாயோ நகரில் துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாவே தடுமாற்றமாக பேட்டிங் செய்து வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தடையிலிருந்து கம்பேக் கொடுத்துள்ள ப்ரண்டன் டைலர் 44 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5, ஜக்காரி போல்க்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அடுத்து விளையாடிய நியூசிலாந்துக்கு 162 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய வில் எங் 74 ரன்கள் குவித்து அவுட்டானார். மறுபுறம் அபாரமாக விளையாடிய டேவோன் கான்வே சதத்தை அடித்தார். எதிர்ப்புறம் வந்த ஜேக்கப் டுபி 36 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஹென்றி நிக்கோலஸ் தம்முடைய பங்கிற்கு நங்கூரமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் அசத்திய கான்வே 153 ரன்கள் விளாசி அவுட்டானார்.
அதற்கடுத்ததாக வந்த ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி சத்தத்தை அடித்தார். எதிர்ப்புறம் அசத்திய ஹென்றியும் சதத்தை அடித்து அசத்தினார். தொடர்ந்து அசத்திய அந்த ஜோடியின் ஆட்டத்தால் 2வது நாள் முடிவில் நியூஸிலாந்து 601/3 ரன்கள் எடுத்தது. அத்தோடு நியூசிலாந்து இன்னிங்ஸை
டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. களத்தில் நிக்கோலஸ் 150*, ரவீந்திரா 165* (139) ரன்கள் இருந்தார்கள்.
இப்போட்டியின் வாயிலாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் மூன்று 150+ ரன்களை (கான்வே 153, நிக்கோலஸ் 150*, ரவீந்திரா 165*) அடித்த அணி என்ற இந்தியா மற்றும் இங்கிலாந்தின் தனித்துவமான உலக சாதனையை நியூசிலாந்து சமன் செய்துள்ளது. இதற்கு முன் 1938 லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அந்த சாதனையை படைத்தது. சார் லியோனர்ட் 364, மௌரிஸ் லேலேண்ட் 187*, ஜோ ஹார்ட்ஸ்டாப் 169* ரன்கள் அடித்திருந்தார்கள்.
இதையும் படிங்க: டோமினிகா முதல் ஓவல் வரை.. முதல் 24 டெஸ்ட் போட்டிகளில் முதல் வீரராக வித்தியாசமான சாதனை – ஜெய்ஸ்வால் அசத்தல்
கடைசியாக 1986ஆம் ஆண்டு கான்பூர் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா அந்த உலக சாதனையைப் படைத்திருந்தது. அப்போட்டியில் இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர் 176, முகமது அசாருதீன் 199, கபில் தேவ் 163 ரன்கள் அடித்திருந்தார்கள். அதற்கடுத்ததாக தற்போது நியூசிலாந்து அணி தான் இந்த சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.