இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 41 ரன்கள் சராசரியுடன் 411 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக இந்த இங்கிலாந்து தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்த அவர் கடைசியாக நடைபெற்ற லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்து இந்த தொடரை சிறப்பாக முடித்திருந்தார்.
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நிகழ்த்திய வித்தியாசமான சாதனை :
தற்போது 23 வயதான ஜெய்ஸ்வால் இதுவரை இந்திய அணிக்காக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதம் மற்றும் 12 அரை சதங்களுடன் 2029 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 ரன்கள் சராசரியுடன் விளையாடி வரும் அவர் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து விளையாட முடியும் என்பதால் பல்வேறு சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் தற்போது 23 வயதான அவர் வெறும் 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் விசித்திரமான ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : தனது டெஸ்ட் கிரிக்கெட் கரியரை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் துவங்கிய அவர் தனது அறிமுக போட்டியிலே சதம் அடித்து அமர்க்களமாக துவங்கி இருந்தார்.
அதன் பின்னர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜெய்ஸ்வால் தொடர்ச்சியாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக சவால் வாய்ந்தாடுகளாக பார்க்கப்படும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க நாடுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் இங்கிலாந்து மண்ணில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதோடு இந்தியாவிலும் சில டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். இப்படி தனது முதல் 24 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் எந்த ஒரு மைதானத்திலும் இதுவரை இரண்டாவது முறை டெஸ்ட் போட்டியில் விளையாடியது கிடையாது.
இதையும் படிங்க : கேஎல் ராகுல் மேலே இவ்வளவு வன்மமா? லக்னோ அணியின் பதிவை கண்டித்த முன்னாள் வீரர் – ரசிகர்கள்
அதாவது அவர் இதுவரை விளையாடிய 24 டெஸ்ட் போட்டிகளும் தனித்தனியே வெவ்வேறு நகரங்களில் உள்ள மைதானங்களில் விளையாடியதாக அமைந்துள்ளது. இப்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 24 ஆட்டங்கள் 24 வெவ்வேறு மைதானங்களில் விளையாடிய வீரராக அவர் விசித்திரமான சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



