கேஎல் ராகுல் மேலே இவ்வளவு வன்மமா? லக்னோ அணியின் பதிவை கண்டித்த முன்னாள் வீரர் – ரசிகர்கள்

KL Rahul
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. அத்தொடருக்கு முன்பாக விராட், ரோஹித், அஸ்வின் உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வு பெற்றார்கள். அதனால் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் தோல்வியைச் சந்திக்கும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது.

இருப்பினும் ஆரம்பம் முதலே இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்த இளம் இந்திய அணி தொடரை சமன் செய்து ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையைப் பகிர்ந்து கொண்டது. குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிராக்கள் வெற்றி பெற்றது. அந்த வெற்றியில் அனைத்து வீரர்களும் முக்கிய பங்காற்றி ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவுகளைப் பரிசாக கொடுத்தனர்.

- Advertisement -

ராகுல் மேலே வன்மம்:

இந்நிலையில் 2025 ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் குறித்த நினைவுகள் பற்றிய புகைப்படத்தை லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் ஐபிஎல் அணி ட்விட்டரில் பதிவிட்டது. அதில் முக்கிய தருணங்களின் புகைப்படத்தை லக்னோ அணி பதிவிட்டிருந்தது. ஆனால் அந்தப் புகைப்படத்தில் ஒரு இடத்தில் கூட கேஎல் ராகுல் படம் இல்லாதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

2022, 2023, 2024 ஐபிஎல் தொடர்களில் லக்னோ அணியின் முதல் கேப்டனாக விளையாடிய ராகுல் பெரியளவில் அசத்தவில்லை. சொல்லப்போனால் ஒரு போட்டியில் தோல்விக்குக் காரணமாக அமைந்ததால் பொதுவெளியில் லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் அவரை திட்டும் வகையில் பேசினார். அதனால் கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியிலிருந்து வெளியேறிய ராகுல் டெல்லி அணிக்காக விளையாடினார்.

- Advertisement -

ரசிகர்கள் விளாசல்:

டெல்லி அணியில் மிகச்சிறப்பாக விளையாடி மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய ராகுல் இங்கிலாந்து தொடரிலும் 532 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அத்துடன் ராகுல் விளையாடியதிலேயே இது தான் மிகச்சிறந்த ஆட்டம் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மனதார பாராட்டினார். அப்படிப்பட்டவரை லக்னோ அணி புறக்கணித்துள்ளதைப் பார்க்கும் ரசிகர்கள் ராகுல் மேலே ஏன் இவ்வளவு வன்மம்? என்று சாடுகின்றனர்.

இதையும் படிங்க: இது இங்கிலாந்துக்கு பெரிய தோல்வி.. இந்தியாவுக்கு மெகா வெற்றி.. காரணம் இது தான்.. மைக்கேல் கிளார்க் பேட்டி

நாட்டுக்காக அசத்திய ராகுலை புறக்கணித்துள்ளது உங்களுக்குத் தான் அவமானம் என்றும் ரசிகர்கள் லக்னோ அணியை விமர்சிக்கின்றனர். அதன் உச்சமாக முன்னாள் இந்திய வீரர் டோட்டா கணேஷ். “இது சங்கடப்படுத்துவதாக அமைகிறது. இங்கிலாந்தில் புதிய பந்தை சிறப்பாக எதிர்கொண்டு 500க்கும் மேற்பட்ட ரன்களை அடித்தவருடைய புகைப்படத்தை எடுக்கவில்லை” என்று லக்னோ அணியை வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

Advertisement