இது இங்கிலாந்துக்கு பெரிய தோல்வி.. இந்தியாவுக்கு மெகா வெற்றி.. காரணம் இது தான்.. மைக்கேல் கிளார்க் பேட்டி

Micheal Clarke
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடருக்கு முன்பாக விராட், ரோஹித், அஸ்வின் ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றார்கள். அதனால் இங்கிலாந்து மண்ணில் இளம் இந்திய அணி படுதோல்வியை சந்திக்கும் என்பதே பலருடைய எதிர்ப்பாக இருந்தது.

ஆனால் முதல் போட்டியிலிருந்தே இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்த இந்தியா என்ற 2 – 2 கணக்கில் தொடரை சமன் செய்தது. குறிப்பாக முதல் போட்டியிலேயே 5 சதங்கள் அடித்து இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்த இந்தியா 7 கேட்ச்களை தவற விட்டதால் தோற்றது. 2வது போட்டியில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய 336 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியைப் பெற்றது.

- Advertisement -

இங்கிலாந்துக்கு தோல்வி:

3வது போட்டியில் போராடி வெறும் 22 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்ற இந்தியா 4வது போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்து டிரா செய்தது. கடைசிப் போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்தியா தோற்கும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்ட இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் சமனில் முடிந்த இத்தொடர் இங்கிலாந்துக்கு சொந்த மண்ணில் பெரிய தோல்வியைப் போன்றது என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். அதே சமயம் விராட், ரோஹித் போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல் சமன் செய்த இளம் இந்திய அணிக்கு இது மெகா வெற்றி என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கிளார்க் பாராட்டு:

“இங்கிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் 2 – 2 என்ற கணத்தில் தொடரில் சமன் செய்துள்ளது. ஒருவேளை நான் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்தால் அதற்காக ஏமாற்றத்தைச் சந்தித்திருப்பேன். ஏனெனில் சொந்த மண்ணில் நான் வெற்றி பெற விரும்பினேன். இங்கிலாந்து தொடரை வெல்வோம் என்ற எதிர்பார்ப்புடன் வந்திருப்பார்கள். இந்தியாவை நான் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை”

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறும் அஷ்வின்.. தன்னை விடுவிக்குமாறு வேண்டுகோள் – என்ன நடந்தது?

“ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக சாதித்துள்ளார்கள். ஒருவேளை இந்தியா தோல்வியை சந்தித்திருந்தால் மக்கள் அதை மதித்திருப்பார்கள். ஏனெனில் புதிய கேப்டன், சீனியர் வீரர்கள் இல்லாமல் விளையாடினார், உலகின் சிறந்த பவுலர் (பும்ரா) 3 போட்டியில் மட்டுமே விளையாடினார் என்பது மக்களுக்குத் தெரியும். இங்கிலாந்து வெற்றி பெறுவோம் என்ற எதிர்பார்ப்புடன் சென்றிருப்பார்கள். ஆனால் அங்கே இந்தியா அதிகமாக செயல்பட்டுள்ளது. என்னுடைய கருத்துப்படி 2 – 2 என்று தொடரை சமன் செய்தது இந்தியாவைப் பொறுத்த வரை வெற்றியாகும்” என்று கூறினார்.

Advertisement