கவலைப்படாதீங்க நியூஸிலாந்து அதுல வீக்கா இருக்காங்க.. இம்முறை வெற்றி நமதே.. ஆகாஷ் சோப்ரா அதிரடி கருத்து

Aakash Chopra
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா உங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அதே போல தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணைகளும் லீக் சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதை தொடர்ந்து நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் செமி ஃபைனல் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா மற்றும் 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் மற்ற அணிகளுக்கு எதிராக தடுமாறினாலும் நியூசிலாந்து ஐசிசி தொடர்களின் வரலாற்றில் எப்போதுமே இந்தியாவுக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்று வலுவான அணியாக செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

பலவீனமான நியூசிலாந்து:
குறிப்பாக 2019 செமி பைனல் உட்பட ஐசிசி தொடரில் இதுவரை சந்தித்த 3 நாக் அவுட் போட்டிகளிலும் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து வெற்றி வாகை சூடியுள்ளது. அதனால் அந்த அணியை மீண்டும் இம்முறை செமி ஃபைனலில் எதிர்கொள்வது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் கலக்கமும் கவலையும் அடைந்துள்ளனர்.

இருப்பினும் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 20 வருடங்கள் கழித்து கடந்த சில வாரங்களுக்கு முன் ஐசிசி தொடரில் முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்ததை போல் இம்முறையும் வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்தின் பவுலிங் அட்டாக் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த உலகக் கோப்பையில் பலவீனமாக இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே அதை பயன்படுத்தி இந்தியா இம்முறை நிச்சயம் வெற்றி வாகை சூடும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “செமி ஃபைனல் சுற்று தற்போது தயாராக இருக்கிறது. அதில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடுகிறது. பொதுவாக நியூசிலாந்து எப்போதுமே இந்தியாவுக்கு சற்று பயத்தை கொடுக்கும் அணியாக இருந்து வருகிறது. அவர்கள் நமக்கு நிறைய சிரமத்தை கொடுப்பார்கள். ஆனால் நல்லவேளையாக அவர்களின் தொடர் வெற்றிகளை நாம் நிறுத்தியுள்ளோம்”

இதையும் படிங்க: தொட முடியாத அளவுக்கு.. அவர் வெற்றிகரமா செயல்பட இதான் காரணம்.. டெக்னிக்கை விளக்கிய வாசிம் அக்ரம்

“தற்போதைய நியூசிலாந்து அணி கடந்த காலங்களில் நம்மை அச்சுறுத்திய அதே அணியாக இல்லை. ஏனெனில் அவர்களுடைய பவுலிங் சற்று பலவீனமாகியுள்ளது. பொதுவாக அவர்கள் இப்படி இல்லாமல் சிறப்பாக செயல்படுவார்கள். குறிப்பாக ட்ரெண்ட் போல்ட் கடந்த போட்டியில் விக்கெட்டுகளை எடுத்தாலும் இத்தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் டிம் சௌதீ, லாக்கி பெர்குசன் இருவரும் சுமாராகவே செயல்பட்டுள்ளார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல பாகிஸ்தானின் பக்கார் ஜாமான் அதிரடியாகவும் இலங்கையின் தீக்சனா 9வது இடத்தில் 91 பந்துகளை எதிர்கொள்ளும் அளவுக்கு நியூசிலாந்தின் பவுலிங் சற்று தடுமாற்றமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement