வில்லியம்சனுக்கு மீண்டும் நேர்ந்த சோகம்.. வங்கதேசத்தை வீழ்த்திய நியூஸிலாந்து.. ஹாட்ரிக் வெற்றி பெற்றது எப்படி?

NZ vs BAN
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 13ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 11வது லீக் போட்டியில் வலுவான நியூசிலாந்தை கத்துக்குட்டியான வங்கதேசம் எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்துக்கு போல்ட் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே லிட்டன் தாஸ் கோல்டன் டக் அவுட்டானார்.

இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த நிதானமாக விளையாட முயற்சித்த தன்சித் ஹசன் 16, மெஹதி ஹசன் 30 ரன்களில் லாக்கி பெர்குசன் வேகத்தில் அவுட்டானார்கள். அடுத்ததாக வந்த நஜ்முல் சான்டோவும் 7 ரன்களில் ஆட்டமிழந்ததால் 56/4 என தடுமாறிய வங்கதேசம் 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 5வது விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடி 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய கேப்டன் சாகிப் அல் ஹசன் 40 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

நியூஸிலாந்து வெற்றி:
அடுத்த சில ஓவர்களிலேயே அவருடன் மறுபுறம் சிறப்பாக விளையாடிய முஸ்பிகர் ரஹிம் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 66 (75) ரன்களில் அவுட்டானார். இறுதியில் முகமதுல்லா 41* ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவர்களில் வங்கதேசம் 245/9 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 3 விக்கெட்களையும் மாட் ஹென்றி மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 246 என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு ஆரம்பத்திலேயே ரச்சின் ரவீந்திர 9 ரன்களில் அவுட்டாகி சென்றார். இருப்பினும் அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சனுடன் மறுபுறம் சிறப்பாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் டேவோன் கான்வே 2வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 45 (59) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த டார்ல் மிட்சேலுடன் கைகோர்த்த வில்லியம்சன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார்.

- Advertisement -

குறிப்பாக காயத்தால் கடந்த 2 போட்டிகளில் விளையாடாத அவர் இப்போட்டியில் முழுமையாக குணமடைந்து கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் 78* (107) ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் கையில் காயத்தை சந்தித்த அவர் பாதியிலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து நடந்த போட்டியில் டார்ல் மிட்சேல் அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி 4 சிக்சருடன் 89* (67) ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க: நாளைய போட்டியில் சுப்மன் கில் விளையாடுவாரா? மாட்டாரா? – நேரடியான பதிலை அளித்த ரோஹித் சர்மா

அவருடன் கிளன் பிலிப்ஸ் 16* ரன்கள் எடுத்ததால் 42.5 ஓவரிலேயே 248/2 ரன்கள் எடுத்த நியூஸிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதனால் முஸ்தபிர் ரஹீம் மற்றும் சாகிப் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தும் வங்கதேசம் வெற்றி காண முடியவில்லை. மேலும் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் வென்று ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்துள்ள நியூசிலாந்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்தில் மிரட்டி வருகிறது.

Advertisement