ஆப்கனை ஓடவிட்ட நியூஸிலாந்து.. பாய்ண்ட்ஸ் டேபிளில் இந்தியாவை முந்தி.. ரோஹித் படைக்கு மாஸ் எச்சரிக்கை

NZ vs AFg 2
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 18ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 16வது லீக் போட்டியில் வலுவான நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. கடந்த போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்த உத்வேகத்துடன் மதியம் 2 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 20 ரன்களில் அவுட்டானார்.

அடுத்ததாக வந்தோம் ரச்சின் ரவீந்தரா மற்றொரு துவக்க வீரர் வில் எங்குடன் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆனால் அவரை 32 ரன்களில் அவுட்டாக்கிய ஓமர்சாய் அதே ஓவரில் வில் எங்கையும் 54 ரன்களில் அவுட்டாக்கிய நிலையில் அடுத்ததாக வந்த டார்ல் மிட்சேலை 1 ரன்னில் ரசித் கான் காலி செய்தார். அதனால் 109/1 என்ற நல்ல நிலையில் இருந்தால் நியூசிலாந்து திடீரென 110/4 என சரிந்தது.

- Advertisement -

ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த கிளன் பிலிப்ஸ் – கேப்டன் டாம் லாதம் ஆகியோர் நிதானமாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தார்கள். அதில் கிளன் பிலிப்ஸ் 71 ரன்களும் டாம் லாதம் 68 ரன்களும் எடுத்து அவுட்டான நிலையில் கடைசி நேரத்தில் மார்க் சேப்மேன் 25* (12) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 50 ஓவர்களில் நியூசிலாந்து 288/6 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஓமர்சாய் மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 289 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு துவக்க வீரர்கள் ரகமனுல்லா குர்பாஸ் 11, இப்ராஹிம் ஜாட்ரான் 14 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தனர். அவர்களை விட மிடில் ஆர்டரில் ராகில் ஷா 36, கேப்டன் ஷாகிதி 8, ஓமர்சாய் 27, முகமது நபி 7 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

மேலும் இக்ரம் கில் 19* (21) ரன்கள் எடுத்த போராடிய போதிலும் டெய்ல் எண்டர்கள் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 34.4 ஓவரிலேயே 139 ரன்களுக்கு ஆப்கானிஸ்தானை சுருட்டிய நியூசிலாந்து 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குறிப்பாக கடந்த போட்டியில் இங்கிலாந்து மிரட்டிய ஆப்கானிஸ்தானை அப்படியே அடக்கிய அந்த அணி சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் சாட்னர், லாக்கி பெர்குசன் தலா 3 விக்கெட்டுகளும் டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

இதையும் படிங்க: வேர்லடுகப் டைம்ல இதெல்லாம் தேவையா? ரோஹித் சர்மாவிற்கு அபராதம் விதித்த போலிசார் – என்ன நடந்தது?

அதை விட 4 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்த நியூசிலாந்து புள்ளி பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. அத்துடன் 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் உட்பட கடந்த 20 வருடங்களில் தொடர்ந்து ஐசிசி தொடர்களில் இந்தியாவை தோற்கடித்து வரும் நியூசிலாந்து அக்டோபர் 22ஆம் தேதி அடுத்த போட்டியில் உங்களை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்ற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

Advertisement