வேர்லடுகப் டைம்ல இதெல்லாம் தேவையா? ரோஹித் சர்மாவிற்கு அபராதம் விதித்த போலிசார் – என்ன நடந்தது?

Rohit
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலக கோப்பை தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து அக்டோபர் 19-ஆம் தேதி புனே நகரில் நடைபெறவுள்ள நான்காவது லீக் ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்து தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி வரும் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு புனே நகர போலீசார் மூன்று அபராதங்களை விதித்துள்ள தகவல் தற்போது இணையத்தில் அதிக அளவு கவனத்தை ஈர்த்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா அகமதாபாத்தில் இருந்து மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதாக முடிவு எடுத்துள்ளார். அதன்படி மும்பை சென்ற அவர் அங்கு இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்த பின்னர் மீண்டும் புனே நகருக்கு செல்ல வேண்டும் என்பதனால் தனது சொகுசு காரில் பயணம் செய்ய முடிவு எடுத்துள்ளார்.

அதன்படி மும்பையில் இருந்து புனே நகருக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பயணித்த ரோகித் சர்மா மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தையும் தாண்டி தனது சொகுசு காரில் பயணித்ததாக சாலையில் பொருத்தப்பட்ட வேகக் கட்டுப்பாட்டு கருவில் பதிவாகியுள்ளது. ரோகித் சர்மா பயணித்த அந்த கார் மூன்று இடங்களில் 200-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துள்ளது.

- Advertisement -

இப்படி சாலை விதிமுறைகளை மீறிய அந்த கார் யாருடையது என்று ஆராய்ந்த போது அது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் கார் தான் என்பது உறுதியானது. இதன் காரணமாக ரோகித் சர்மாவின் மீது சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மூன்று அபராதங்களை புனே போலீசார் விதித்துள்ளனர். உலககோப்பை நடைபெற்று வரும் வேளையில் இந்திய வீரர்கள் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பேருந்தில் தான் பயணிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இதையும் படிங்க : ஒழுங்கா மன்னிப்பு கேளுங்க.. அவங்களோட ரெகார்ட்டை ஸ்க்ரீன்ல போட்டு காட்டுங்க.. வார்னர் அதிரடி

இவ்வேளையில் ரோஹித் சர்மா இப்படி மும்பையில் உள்ள வீட்டிற்கு சென்றது மட்டுமின்றி தனது காரில் அதிவேகமாக பயணித்தது தற்போது அனைவரும் மத்தியில் விமர்சிக்கப்படும் விடயமாக மாறி உள்ளது. உலகக் கோப்பை தொடரானது நடைபெறும் வேளையில் ஏதாவது ஏடா கூடமாக ஆகியிருந்தால் இது எல்லாருக்குமே பிரச்சனையாக மாறியிருக்கும் என்பதனால் ரோஹித் சர்மாவின் இந்த செயலானது தற்போது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement