பாண்டியா காயத்தால்.. ஆரம்பிச்ச இடத்துலயே முடியும்ன்னு நெனைக்கல.. தனது கேரியர் பற்றி அஸ்வின் உருக்கம்

Ravichandran Ashwin 3
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 6வது முறையாக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. மறுபுறம் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி லீக் மற்றும் செமி ஃபைனலில் மிகச் சிறப்பாக விளையாடி தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்து உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியது.

ஆனாலும் மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்ற இந்தியா கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. மேலும் இத்தொடரில் மிகச் சிறப்பாக விளையாடியும் வெற்றியை காண முடியாததால் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் களத்திலேயே கண்ணீர் விட்டு கலங்கினார்கள்.

- Advertisement -

முடிந்த பயணம்:
அதே போல இந்த தோல்வியால் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் மேற்கொண்டு உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் விடை பெற உள்ளார் என்றே சொல்லலாம். ஏனெனில் சர்வதேச அரங்கில் 900+ மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்திருந்தும் கடந்த 2022 ஜனவரிக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்ட அவர் கடைசி நேரத்தில் அக்சர் பட்டேல் காயமடைந்ததால் 2023 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

அதில் தம்முடைய சொந்த ஊரான சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அவருக்கு அணியின் கலவை காரணமாக மேற்கொண்டு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் தற்போது 37 வயதாகும் அவர் அடுத்த 2027 உலகக்கோப்பை அல்லது அடுத்த ஜூன் மாதம் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பை ஆகிய தொடர்களிலும் தேர்ந்தெடுக்கப்படுவது 99% அசாத்தியமானதாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியே தம்முடைய கடைசி உலகக்கோப்பை போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சென்னையில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை போட்டியுடன் என்னுடைய பயணம் முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கவே இல்லை. ஏனெனில் நான் நல்ல ஃபார்மில் பந்து வீசினேன்”

இதையும் படிங்க: பென் ஸ்டோக்ஸை நாங்க ஒன்னும் கழற்றி விடல.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

“இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிராக தரம்சாலாவில் நடைபெற்ற போட்டியில் எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதாக இருந்தது. ஆனால் ஹர்திக் பாண்டியா காயமடைந்ததால் அது பறிபோனது. மேலும் அவருக்கு பதிலாக விளையாடுவதற்கு எங்களிடம் சரியான மாற்று ஆல் ரவுண்டர் இல்லை. இத்தொடரில் ஆரம்பம் முதலே ரோகித் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் வலுவான திட்டங்களுடன் அணியை வழி நடத்தினார்கள். அவர்களால் தான் நாங்கள் இந்த உலகக் கோப்பையில் ஆர்வமான பிராண்ட் கிரிக்கெட்டை விளையாடினோம்” என்று கூறினார்.

Advertisement