கிரௌண்ட்க்கு போனா அதை மட்டும் பாக்க மாட்டேன்.. தனது வெற்றிகரமான பவுலிங்கின் பின்னணியை பகிர்ந்த ஷமி

Shami Press
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக லீக் மற்றும் செமி ஃபைனலில் சிறப்பாக விளையாடிய இந்தியா அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங் துறையில் சுமாராக செயல்பட்டு 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

இருப்பினும் இத்தொடரில் 765 ரன்கள் குவித்து அசத்திய விராட் கோலி தொடர்நாயகன் விருது வென்றதும் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடியதும் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. அவர்களை விட முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் இருந்து காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற முகமது ஷமி எதிரணிகளை தெறிக்க விடும் செயல்பாடுகளை வெளிப்படுத்தியது ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமைந்தது.

- Advertisement -

ரொம்ப சிம்பிள் பிளான்:
குறிப்பாக 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை எடுத்த அவர் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பவுலர் என்ற சாதனை படைத்தார். அதிலும் குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் 7 விக்கெட்டுகளை எடுத்த அவர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு நாக் அவுட் போட்டியில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்தார்.

இந்நிலையில் சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் உங்களுடைய மிரட்டலான பவுலிங்கின் ரகசியம் என்ன என்பது பற்றி ஷமியிடன் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மைதானத்திற்கு சென்றதும் அங்குள்ள பிட்ச்சை பார்க்காமல் தாம் என்ன பயிற்சி எடுத்தேனோ அதற்கு தகுந்தாற்போல் பந்து வீசும் எளிமையான திட்டத்தை மட்டுமே கடைப்பிடிப்பதாக ஷமி பதிலளித்தது பின்வருமாறு.

- Advertisement -

“பொதுவாக அனைத்து பவுலர்களும் மைதானத்திற்கு சென்ற பின் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை சோதிப்பார்கள். ஆனால் நான் எப்போதுமே மைதானத்திற்கு சென்றால் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை அருகில் கூட சென்று பார்க்க மாட்டேன். ஏனெனில் உண்மையாக பிட்ச் எப்படி இருக்கும் என்பது நீங்கள் பந்து வீசும் போது தான் உங்களுக்கே தெரிய வரும். எனவே அதை முன்கூட்டியே பார்த்து ஏன் அழுத்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்? அனைத்தையும் நீங்கள் எளிமையாக கடைபிடிக்க வேண்டும்”

இதையும் படிங்க: கிரௌண்ட்க்கு போனா அதை மட்டும் பாக்க மாட்டேன்.. தனது வெற்றிகரமான பவுலிங்கின் பின்னணியை பகிர்ந்த ஷமி

“உங்களுக்கு நீங்களே ரிலாக்ஸாக இருந்தால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும். உலகக் கோப்பையில் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருக்க வேண்டிய நிலைமை வந்தால் அதை எதிர்கொள்ள மனதளவில் உறுதியாக இருக்க வேண்டும். அது உங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் உங்களுடைய அணி சிறப்பாக செயல்படும் போது அதுவே உங்களுக்கு திருப்தியை கொடுக்கும்” என்று கூறினார்.

Advertisement