முடிவுக்கு வரும் சீனியர் வீரரின் கிரிக்கெட் கரியர்.. கட்டம் கட்டியதா பி.சி.சி.ஐ? – விவரம் இதோ

Bhuvi
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது சொந்த மண்ணில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து மீண்டும் ஒருமுறை 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பினை தவறவிட்டது. இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்திய உள்ள வேளையில் அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடர் ஆரம்பிக்கவுள்ளது.

ஆம், உலகக்கோப்பை முடிந்த நான்கு தினங்களிலேயே நவம்பர் 23-ஆம் தேதி முதல் டிசம்பர் 03-ஆம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ நவம்பர் 20-ஆம் தேதி அறிவித்தது.

- Advertisement -

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான விராத் கோலி, ரோகித் சர்மா, கே.எல் ராகுல், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களுக்கு ஓய்வெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சூரியகுமார் யாதவுக்கு கேப்டன் பதவியும், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு முதல் மூன்று போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இணைவதால் அவர் கடைசி இரண்டு போட்டிகளில் துணைக்கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் சில குறிப்பிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் கேள்வியை எழும்பியுள்ளது. ஏனெனில் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடருக்காக தற்போதே தயாராக வேண்டிய சூழலில் அணியின் காம்பினேஷனை பலப்படுத்துவது அவசியம். அந்த வகையில் சரியான வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் சில குறிப்பிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்த புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அண்மையில் நடைபெற்ற முடிந்த சையத் முஷ்டாக் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய அவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க : 60 வினாடில வரலைன்னா 5 ரன்ஸ் பெனால்டி.. ஒய்ட் பால் கிரிக்கெட்டில் ஐசிசி அறிவித்த 3 புதிய விதிமுறை

பவர்பிளே ஓவர்களில் ஸ்விங் செய்து அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தும் அவருக்கு சமீப காலமாகவே இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் வேளையில் இந்த தொடரிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் பிசிசிஐ அவரை திட்டம் தீட்டி ஓரம் கட்டுகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

Advertisement